Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சத்தமின்றி உதவிய இசை கலைஞர்கள்

20 ஜூன், 2020 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Music-directors-helps-to-music-artist

தென்னிந்திய திரைப்பட இசை அமைப்பாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் சங்கம் உள்ளது. இதன் தலைவராக இசை அமைப்பாளர் தினா இருக்கிறார், இதில் சுமார் 1250 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கின் காரணமாக இசை கலைஞர்கள் வேலை இழந்த தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு இசை அமைப்பாளர்கள் சத்தமின்றி உதவி இருக்கிறார்கள்.

இசை அமைப்பாளர்கள் இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் தலா 10 லட்சம் வழங்கி உள்ளனர். இமான் மற்றும் அனிருத் தலா 3 லட்சம் வழங்கி உள்ளனர். இசை கலைஞர்கள் சங்கத்திற்கு கொரோனா நிதியாக 28 லட்சத்து 50 ஆயிரம் சேர்ந்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் தினா கூறியதாவது: இசையமைப்பாளர்கள் சங்கத்தில் 1248 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே தலா 25 கிலோ அரிசியும் ரூ.500 உதவி தொகையும் வழங்கப்பட்டது. ரூ.1500 மதிப்புள்ள கூப்பனும் வினியோகிக்கப்பட்டது.

இசையமைப்பாளர்கள் வழங்கிய உதவித் தொகையை சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் பிரித்து கொடுத்துள்ளோம். கொரோனா பாதிப்பினால் இந்த வருடம் உறுப்பினர்கள் சந்தா தொகை செலுத்த வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இசை கலைஞர்களுக்கு நிதி வழங்கிய இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு வாழ்க்கை முழுவதும் நன்றி கடன்பட்டுள்ளோம். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'கும்கி' அஸ்வின் திருமணம்: காதலியை மணக்கிறார்'கும்கி' அஸ்வின் திருமணம்: காதலியை ... பொன்விழா படங்கள்: பத்தாம் பசலி - தனது படத்தை ரீமேக் செய்த கே.பாலச்சந்தர் பொன்விழா படங்கள்: பத்தாம் பசலி - தனது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

20 ஜூன், 2020 - 23:10 Report Abuse
rasheed நல்ல செய்திகள் ஆனால் எங்களை போன்ற ஏழை ரசிகன் எங்களுக்கு கடை கோடி ரசிகன் என்ன பலன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in