வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட் | அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட் | தன்னை கேலி செய்த நபருக்கு பொறுமையாக பதில் கொடுத்த ஜாக்குலின் | பாரதி கண்ணம்மா சீசன்2வை உறுதி செய்த இயக்குநர் பிரவீன் பென்னட்! | கல்வி நிலையங்களில் சினிமா விழாக்கள், நிறுத்தப்படுமா ? | 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா 'பதான்' ? | ரூ.100 கோடி வசூலித்த 'மாளிகப்புரம்' | 'வாத்தி' இயக்குனரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் | இந்தியன் 2 - ஹெலிகாப்டரில் தினமும் வந்து செல்லும் கமல்ஹாசன் | 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா |
தயாரிப்பாளர் சாமிநாதனின் மகன் அஸ்வின். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு வந்தான் வென்றான், கும்கி, தில்லுமுல்லு, நையாண்டி, நெடுஞ்சாலை, கணிதன், அச்சமின்றி உள்பட 30 படங்களுக்கு மேல் நடித்தார். கும்கி படத்தில் பெரிய கேரக்டரில் நடித்ததால் தன் பெயருக்கு முன்னால் கும்கியை சேர்த்துக் கொண்டார்.
தற்போது கும்கி அஸ்வினுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அஸ்வினும் அமெரிக்காவில் படித்த வித்யாஸ்ரீயும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்கள். தற்போது இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. வருகிற 24ந் தேதி அஸ்வின் வீட்டில் திருமணமும் எளிமையாக நடக்கிறது.