சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
தங்க மீன்கள் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் சாதனா. அதன்பிறகு ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தில் நடித்தார். அதில் அவர் மனவளர்ச்சி குன்றிய பதின்ம வயது பெண்ணாக நடித்தார். இதிலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. ராம் இயக்கம் தவிர வேறெந்த படத்திலும் சாதனா நடிக்கவில்லை.
அவர் தனது குடும்பத்தினருடன் துபாயில் வசித்து வருகிறார். சாதனாவின் தந்தை மார்கெட்டிங் மானேஜராக உள்ளார். தாய் நடன ஆசிரியையாக உள்ளார். இதனால் சாதனா பரதநாட்டியம் மற்றும் மேற்கத்திய நடனங்களை கற்று தேர்ந்துள்ளார்.
தற்போது 18 வயதை நெருங்கும் சாதனா படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு தயாராகி வருகிறார். தனது உயர் பள்ளி கல்வியை முடித்து விட்ட அவர் அடுத்து கல்லூரி படிப்புக்கும் செல்ல இருக்கிறார். சமீபத்தில் எடுத்த தனது புகைப்படம் ஒன்றை அவர் மக்கள் தொடர்பாளர் மூலம் வெளியிட்டுள்ளார்.