பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
மலையாளத் திரைப்பட இயக்குனரான சாச்சி மறைவு மலையாளத் திரையுலகத்தை மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகத்தினரையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் கடைசியாக இயக்கிய 'அய்யப்பனும் கோஷியும்' மலையாளப் படத்தை தமிழ் ரசிகர்கள் பலரும் விரும்பிப் பார்த்தனர்.
அப்படத்தினை தமிழில் ரீமேக் செய்ய 'ஜிகர்தண்டா' தயாரிப்பாளர் உரிமை வாங்கி வைத்திருக்கிறார். ஒரு பேட்டியில் தமிழ் ரீமேக்கில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கேள்விக்கு, பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் கார்த்தியும், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடித்தால் சிறப்பாக இருக்கும் என சாச்சி கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும் நிதி நிலைமையை வைத்து தயாரிப்பாளர் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அந்த செய்தியை மேற்கோள் காட்டி சாச்சிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் பார்த்திபன். “அய்யப்பனும் கோஷியும்' பிஜு மேனன் பாத்திரம் நான் நடித்தால் நன்றாக இருக்குமென பலரும் சொன்னார்கள். இயக்குனரே சொல்லியிருக்கிறார்-. மகிழும் முன்னரே அவருக்கு RIP சொல்லும் நிலை-நிலைகுலைத்தது. இன்று படத்தை பார்க்கிறேன். அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன். மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம்,” என டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் பல நடிகர்கள், நடிகைகளும் சாச்சி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.