மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
"வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னவிட்டு போகவே இல்ல", படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து ரம்யா கிருஷ்ணன் பேசும் வசனம் இது. உண்மையில் ரஜினியை போலவே இந்த வசனத்துக்கு அதிகம் பொருந்துபவர் ரம்யா கிருஷ்ணனும் தான். ரம்யா கிருஷ்ணனின் அழகுக்கு 90ஸ் கிட்ஸ் எப்போதும் அடிமை.
ரம்யா கிருஷ்ணன் முதலில் நடிகையாக அறிமுகமானது மம்மூட்டி, மோகன்லால் நடித்த நேரம் புலரும்போல் எனும் மலையாளப் படத்தில் தான். அப்போது அவருக்கு 13 வயது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி சினிமாக்களில் நடித்து முன்னணி நடிகையானார். ஹிந்தியில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த ரம்யா, பெரும்பாலும் தென்னிந்திய படங்களில் தான் அதிக கவனம் செலுத்தினார்.
இந்நிலையில், "இந்தி படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் அமைந்தும் நீங்கள் தொடர்ந்து நடிக்காதது ஏன்?", என சமீபத்திய பேட்டி ஒன்றில் ரம்யா கிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஹிந்தி சினிமாவில் இருந்து நான் பிரேக் ஏதும் எடுக்கவில்லை. நான் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. அதனால் தான் எனக்கு ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் ஏற்படவில்லை. அதேசமயம் தென்னிந்தியாவில் நான் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அங்கே அதிக கவனம் செலுத்தினேன்", என பதிலளித்தார்.
சில தினங்களுக்கு முன்பு ரம்யா கிருஷ்ணனின் காரில் இருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த விவகாரம் பரபரப்பை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.