முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் |
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் இருப்பதே சுஷாந்தின் மரணத்திற்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் மாதவனை, ஷாருக்கானும், சைப் அலி கானும் சேர்ந்து கொண்டு கேலி செய்யும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த நிகழ்ச்சியில், மாதவனை தமிழில் பேச சொல்லி கேலி செய்கிறார்கள் ஷாருக்கானும், சைப் அலி கானும். அதற்கு மாதவன், "போங்கடா கிறுக்கு கதாநாயகங்களா", எனக் கூறி பதிலடி கொடுக்கிறார். மாதவன் கூறுவதை கேட்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ரேகா, வித்யா பாலன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் வாய்விட்டு சிரிக்கின்றனர்.
சுஷாந்த் சிங் மரணத்தையொட்டி இந்த வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாலிவுட்டில் நடக்கும் நெபோடிசம் (Nephotism) எனும் குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல் மேலோங்கி வருகிறது.