Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர்காரர்கள் பயப்பட வேண்டாம் : பரவும் தகவல்

19 ஜூன், 2020 - 14:33 IST
எழுத்தின் அளவு:
Dont-fear-theares-owners-:-news-spreading

திரைப்படங்களை இதுநாள் வரையில் தியேட்டர்களில் மட்டுமே ரசிகர்கள் கண்டுகளித்து வந்தனர். பல கோடி ரூபாய் செலவு செய்து சில மாதங்கள் கஷ்டப்பட்டு உருவாகும் புதிய படங்கள் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படங்களைத் தயாரித்து வைத்து திரையிட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக வந்தன ஓடிடி தளங்கள். தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக தங்கள் தளங்களில் படங்களை வெளியிடும் புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

அதற்கு தியேட்டர்காரர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. திரைப்படங்களை நம்பித்தான் தியேட்டர்கள் இருக்கின்றன. தியேட்டர்களைப் புறக்கணித்து தங்களை நசுக்கக் கூடாது என்று குரல் எழுப்பினார்கள்.

இருப்பினும் அவர்களது எதிர்ப்பை மீறி 'பொன்மகள் வந்தாள்' படம் போன மாதமும், இன்று 'பெண்குயின்' படமும் ஓடிடி தளத்தில் வெளியானது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் கிடைத்த மோசமான வரவேற்பைப் பார்த்து தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியாகவே உள்ளார்களாம்.

இப்படிப்பட்ட படங்கள் தியேட்டர்களுக்கு வராமல் இருப்பதே நல்லது. தியேட்டர்காரர்கள் தப்பித்தார்கள் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருவது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால், ஓடிடி தளங்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைக்க வாய்ப்பில்லை என தியேட்டர்காரர்கள் அவர்களது வாட்சப் குழுக்களில் பகிர்ந்து வருகிறார்களாம்.

ஒரு பக்கம் தின்பண்டன் கட்டணம், பார்க்கிங் கட்டணம் என தியேட்டர்காரர்கள் மீது அதிருப்தி இருந்தாலும், தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் ஓடிடி தளங்களில் பார்க்கும் போது இல்லை என ரசிகர்கள் கூறுவதும் அவர்களை ஆறுதல்படுத்தியுள்ளது என்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு முடிந்து பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் தியேட்டர்களுக்கு மக்கள் நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்களாம்.

'பொன்மகள் வந்தாள், பெண்குயின்' போன்ற மிகச் சுமாரான படங்களை ஓடிடி தளங்கள் நேரடியாக வெளியிட்டால் அவர்களுக்கு புதிய சந்தாதாரர்கள் கிடைப்பதும் பறிபோக வாய்ப்புள்ளது என்பதே திரையுலகினரின் கருத்தாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட் இயக்குனரின் சென்னை ஞாபகம்ஹாலிவுட் இயக்குனரின் சென்னை ஞாபகம் கேலி செய்த ஷாருக்: சரியான பதிலடி கொடுத்த மாதவன் கேலி செய்த ஷாருக்: சரியான பதிலடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

True Indian - Coimbatore,இந்தியா
20 ஜூன், 2020 - 16:49 Report Abuse
True Indian டாஸ்மாக் , சினிமா தியேட்டர் இரண்டும் தமிழர்களின் இரு கண்கள். தோல்வியே கிடையாது. எந்த காலத்திலும் அழியாது. சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க.....
Rate this:
19 ஜூன், 2020 - 21:49 Report Abuse
rasheed தியேட்டர். காரர். பயம். வேண்டாம்.. இது. எங்க. சொந்த. வீடு. 200 வருடமா. வெற்றி உடன் ஓடி கொண்டு. இருக்கும். பிரமாண்டம் இதை. யாருமே. மறைக்க. முடியாது உறவினர். வீட்டுக்கு. போய். வருவது. போல். மாட்டு. வண்டி. சாப்டுட்டு படம் பார்த்து. இரவு. வீடு. திரும்பும்.. மறக்கம் மாட்டேம் நாங்க எல்லோரும் தியேட்டர்ல வந்து படம் கண்டிப்பா பார்ப்போமே.
Rate this:
நந்தகோபால், நெல்லை,in.பெங்களுர் நான் தியேட்டரில் படம் பார்ப்பதைத்தான் மிகவும் விரும்புவேன், இப்பொழுது தியேட்டர் டிக்கட் விலையைப் பார்த்து வயித்தெரிச்சல் வருகிறது, நடுத்தர குடும்பமான என்னால் 4 பேருக்கு டிக்கட் வாங்க 1000 ரூபாய், போக்குவரத்து 250 ரூபாய், திண்பண்டம் மட்டுமே500 ரூபாய் வந்துடும், இந்த 1750 ரூபாய் இருந்தா 15 நாள் மளிகை சாமான் வாங்கிடுவேன். இப்பலாம் வருஷத்துக்கு ஒரு படம் தியேட்டர்ல பார்க்க பட்ஜட் போட வேண்டியிருக்கு.
Rate this:
19 ஜூன், 2020 - 20:12 Report Abuse
கதை சொல்லி பயப்படாதீங்க. பயப்படாதீங்க. மாஸ் ஹீரோ படத்தை ரிலீஸ் செய்யுங்க, 2000 கொடுத்து டிக்கட் வாங்கி மணிக்கு 50, 60 என பார்க்கிங் காசு கொடுத்து 200 ரூ க்கு பாப்கார்ன் வாங்கி திங்க வருவாங்க பயப்படாதீங்க. இங்கே இருப்பது அப்படிப்பட்ட கூட்டம்தான். தாராளமாக தலையை மொட்டை அடித்து மிளகாயும் அரைக்கலாம், பயப்படாதீங்க
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
19 ஜூன், 2020 - 18:08 Report Abuse
swa enna sonnalum theatre pakkam vara mattam
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in