18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஒடிடி நிறுவனங்கள் தியேட்டர்களில் இல்லாமல் நேரடியாக படங்களை அவர்களது தளங்களில் வெளியிட ஆரம்பித்துள்ளார்கள்.
முதல் பெரிய படமாக கடந்த மாதம் 'பொன்மகள் வந்தாள்' வெளிவந்தது. அந்தப் படத்தை அமேசான் நிறுவனம் மே 29ம் தேதி பிறக்கும் 12 மணிக்கு வெளியிட முடிவு செய்திருந்தது. ஆனால், அதற்கு ஒன்றரை மணி நேரங்களுக்கு முன்பாகவே பைரசி இணைய தளமான தமிழ் ராக்கர்ஸ் 28ம் தேதி இரவு 10.30 மணிக்கு வெளியிட்டுவிட்டது. வேறு வழியில்லாமல் உடனடியாக அமேசான் நிறுவனம் படத்தை வெளியிட்டது.
தங்கள் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிவருவதற்கு முன்பாகவே படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் மீது அமேசான் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது.
'பொன்மகள் வந்தாள்' படம் போலவே இன்று(ஜுன் 19) வெளியாகி உள்ள 'பெண்குயின்' படத்தை நேற்று இரவு 10.15 மணிக்கெல்லாம் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. அமேசானும் அதே நேரத்தில் 'பெண்குயின்' படத்தை வெளியிட்டுவிட்டது.
உலக அளவிலான முன்னணி ஓடிடி நிறுவனமான அமேசான் நிறுவனம் அவர்கள் வெளியிடும் முன்பாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிடுவதை தடுக்க முடியாமல் திணறுவதை தமிழ்த் திரையுலகம் மிரட்சியுடன் பார்க்கிறது. அவர்களிடமிருந்து எப்படி படம் தமிழ் ராக்கர்ஸ் கைக்குக் கிடைக்கிறது என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.
அவுட்ரைட் ஆக படங்களை அமேசானுக்குக் கொடுப்பவர்களுக்கு இதனால் பிரச்சினையில்லை. நஷ்டம் என்பது அமேசானை மட்டுமே சாரும். ஆனால், 'ஷேர்' அடிப்படையில் படங்களைக் கொடுத்து இப்படி வெளியானால் அதன் தயாரிப்பாளருக்கு பங்குத் தொகை நன்றாக வராது.
அமேசான், இப்படி பைரசியை தடுக்க முடியாமல் தவித்தால் அவர்களுக்கு படங்களைக் கொடுக்க தயாரிப்பாளர்களும் தயங்குவார்கள்.