Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வக்கீல் சாப்' வாய்ப்பு - மறுத்த ஸ்ருதிஹாசன்?

18 ஜூன், 2020 - 17:11 IST
எழுத்தின் அளவு:
Shruti-says-no-to-Vakeel-sabh-movie

அமிதாப்பச்சன் நடித்த ஹிந்தி 'பின்க்', தமிழில் அஜித்குமார் நடிக்க 'நேர்கொண்ட பார்வை' ஆக கடந்த வருடம் ரீமேக்காகி வெளியானது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க 'வக்கீல் சாப்' ஆக ரீமேக்காகி வருகிறது.

தமிழில் அஜித் மனைவியாக வித்யா பாலன் நடித்தார். அது போல் தெலுங்கில் பவன் கல்யாண் மனைவியாக நடிக்கும் நடிகை தேர்வு கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது. சிறிது நேரமே இடம் பெறும் கதாபாத்திரத்திற்காக சில முன்னணி நடிகைகள் நடிக்கத் தயங்குகிறார்கள்.

அவ்வப்போது இவர் நடிப்பார், அவர் நடிப்பார் என செய்திகள் வரும், பின்னாடியே மறுப்பும் வரும். நீண்ட நாட்களாகவே ஸ்ருதிஹாசன் அக்கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்திகள் வெளிவந்தது. இதற்காக பெரிய தொகையும் அவருக்கு சம்பளமாக பேசப்பட்டது.

ஸ்ருதிஹாசனை நேரில் சந்தித்து படத் தயாரிப்பாளரும், இயக்குனரும் நடிக்கக் கேட்டுக் கொண்டார்களாம். ஆனால், அவர் நடிக்க விருப்பமில்லை என பெருந்தன்மையாக சொல்லிவிட்டாராம். அதே சமயம் பவன் கல்யாண் நடிக்க உள்ள மற்றுமொரு படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாய்கள் இறப்பு - மன அழுத்ததில் அனுபமா பரமேஸ்வரன்நாய்கள் இறப்பு - மன அழுத்ததில் அனுபமா ... மூன்று மாணவர்களுக்கு உதவி செய்த ஆண்ட்ரியா மூன்று மாணவர்களுக்கு உதவி செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in