விக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து ஆமீர்கான் விலகியது ஏன் | விக்ரம் பிரபுவின் பகையே காத்திரு | கொற்றவை முதல் பாகம் நிறைவு | கொரோனா 2வது அலை: சாய் பல்லவி படம் தள்ளிவைப்பு | சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா: 4 நாட்கள் நடக்கிறது | இறுதிக்கட்டத்தில் அன்பறிவ் | பகத் பாசில் ரசிகர் மன்றத் தலைவராக விரும்பும் பாலிவுட் நடிகர் | மகேஷ்பாபுவை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | மாரடைப்பு ஏற்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிக்சை | வீரம் டிரஸ்ல இல்ல புரோ - நெட்டிசனுக்கு பதில் கொடுத்த ஜூலி |
மன அழுத்தம் தான் தற்போது திரையுலகினரிடையே ஹாட் டாபிக் ஆக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை அதற்கு வழி செய்து கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். ஆனால் பிரேமம் புகழ் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனோ வேறுவிதமான ஒரு மன அழுத்தத்தில் இருக்கிறார்.. காரணம் அவர் ஆசையாக வளர்த்து வந்த இரண்டு நாய்கள் ஒரு வார கால இடைவெளியில் அடுத்ததடுத்து இறந்ததுதான்.
மூன்று நாய்களை தெருவில் இருந்து எடுத்து வளர்த்து வந்தார் அனுபமா.. விஸ்கி, ரம் மற்று டோடி (கள்ளு) என மதுபான பெயர்களில் அவைகளுக்கு பெயர் வைத்து கால்நடை மருத்துவமனை மூலம் நோய் தடுப்பு மருந்துகளையும் முறையாக கொடுத்திருந்தார். ஆனாலும் தற்போது ரம் மற்றும் டோடி என இரண்டு நாய்களும் நோய் தாக்கி அடுத்ததடுத்து இறந்துவிட்டன.
இதனால் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என கூறியுள்ள அனுபமா, தற்போது விஸ்கி மட்டும் தான் இருக்கிறது. செல்லப்பிராணிகளுக்கு கூட நோய் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் உங்களது வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும கேட்டுக்கொண்டுள்ளார்.