பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பின்னணி பாடகி சின்மயி தொடங்கி வைத்த மீ டூ அந்த விவகாரம் பரபரப்பாக்க, அதன்பிறகு பல திரையுலக பிரபலங்கள் தங்களின் மீ டூ பாதிப்புகளை அடுத்தடுத்து வெளியிட ஆரம்பித்தனர். அதேப்போல தற்போது பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை, சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி புதியவர்களை வளரவிடாமல் நசுக்கும் நபர்களை பற்றி அடுத்தடுத்து புகார்கள் வெளிவருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
சல்மான்கானை வைத்து தபாங் படத்தை இயக்கிய இயக்குனர் அபினவ் காஷ்யப், சல்மான்கான் மற்றும் அவரது குடும்பத்தினரால் தனது வளர்ச்சிக்கு கடந்த பத்து வருடங்களாக எப்படி முட்டுக்கட்டை போடப்பட்டது என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்தநிலையில் தற்போது நடிகை பூனம் கவுர், பிரபல இயக்குனர் ஒருவர், மன அழுத்தத்தில் இருந்த தன்னிடம் “நீ செத்துப்போனால் அது வெறும் ஒருநாள் செய்தி” என்று ஏளனம் செய்ததாக கூறி அதிர்ச்சியளித்துள்ளார். தெலுங்கு நடிகையான இவர் தமிழில் உன்னைப்போல் ஒருவன், ஆறு மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நான் ஒரு கட்டத்தில் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன்.. தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற எண்ணம் கூட தோன்றியது. அப்போது எனது நண்பர் ஒருவர் 'அந்த' இயக்குனரிடம் சென்று எனது நிலை பற்றி கூறி எனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால அந்த இயக்குனர் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு நானே அவரை தொடர்புகொண்டு எனக்குள்ள மன அழுத்தம், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தோன்றும் எண்ணம் ஆகியவை குறித்து பேசி அவரது உதவியை நாடினேன்.. அதற்கு அவர், 'நீ தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனால் அது ஒருநாள் செய்தி.. அவ்வளவுதான்' என்று கூறியது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.
அதன்பிறகு அவர் என்னை பற்றி நிறைய ஆன்லைன் கட்டுரைகள் மூலம் கூறிய வார்த்தைகள் என் மன அழுத்தத்தை அதிகமாக்கியது. மீடியா, திரையுலகம், விளம்பர உலகம் எல்லாம் அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. என்னுடைய பெயரை படத்தின் டைட்டில் கார்டில் இருந்து நீக்கினார். ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்ற புகைப்படங்களை நீக்கினார்.. நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேடையில் பேசுவார்.. ஆனால் இங்கே கண் முன்னாள் தெரியும் திறமையை பாராட்ட மனம் வராது. மாறாக அந்த நபரின் திறமையை எப்படி மறைப்பது என்பதை மட்டும் நன்றாகவே செய்வார். இதில் இவருக்கு மந்திரி மகன்களின் நட்பு வேறு இருப்பதால் அந்த செல்வாக்கால், தனது சுயலாபத்திற்காக தனது நட்பு வட்டாரத்தையே தவறாக கையாண்டு வருகிறார். இறுதியாக சொன்னால் அவர் ஒரு மன நோயாளி” என்று குமுறி தீர்த்திருக்கிறார் பூனம் கவுர்.
அவர் குற்றம் சாட்டி இருப்பது பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவைத்தான் என்றாலும், அந்த பிரபலமான 'அந்த' இயக்குனர் யார் என்பது பற்றி அவர் குறிப்பிடாமல் மறைமுகமாகவே குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.