ரசிகர்களை சந்தித்த தனுஷ் | மீண்டும் தமிழுக்கு வருகிறார் பாவனா | பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் |
கொரானோ ஊரடங்கு பலருக்கு வேலையை இழக்க வைத்து, வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் உள்ள பலரும் வேலை செய்ய முடியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இயக்குனர்கள், நடிகைகள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலருக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டை பொறுத்தவரையில் அவர்களுக்கு இது மோசமான ஆண்டாகவே அமையும்.
இருந்தாலும் இயக்குனர்கள் பலரும் இந்த ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றிவிட்டார்கள். பலரும் பல விதமான கதைகளை எழுதி முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். ஊரடங்கு முடிந்த பின் அடுத்தடுத்து அவர்கள் புதிய படங்களின் அறிவிப்பை வெளியிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேலும், இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இரண்டு மலையாள ஹீரோயின்கள் இந்த கொரானோ ஊரடங்கில் சில கதைகளை எழுதி முடித்துவிட்டார்களாம். பூ, மரியான், உத்தம வில்லன் படங்களின் நாயகி பார்வதி, 24, மெர்சல், சைக்கோ படங்களின் நாயகி நித்யா மேனன் ஆகியோர் படங்களை இயக்குவதற்காக கதை எழுதியுள்ளார்களாம்.
பார்வதி அடுத்த ஆண்டிலும், நித்யா அதற்கடுத்த ஆண்டிலும் படங்களை இயக்கும் அறிவிப்பை வெளியிடலாம் என்கிறார்கள்.