ஐந்து தலைமுறைகளை கண்ட மலையாள நடிகர் இன்னோசன்ட் காலமானார் | தசரா பட டப்பிங்கை ஆறு நாட்களிலேயே முடித்தேன் ; கீர்த்தி சுரேஷ் | ஜூனியர் என்டிஆரின் குழந்தைகளுக்கு ஆலியா பட் அனுப்பி வைத்த அன்பு பரிசு | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க நானும் ஒரு காரணம் ; அஜய் தேவ்கன் | சுந்தர்.சி படத்தில் விஷாலுக்கு பதிலாக பிருத்வி ராஜ்? | பிரபல இளம் நடிகை அகன்ஷா துபே தூக்கிட்டு தற்கொலை | மயோசிட்டிஸில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டாரா சமந்தா? | காஜல் அகர்வாலின் கருங்காப்பியம் ஏப்ரல் 7ம் தேதி ரிலீஸ்! | கரகாட்டக்காரன்- 2 படத்தை இயக்கும் வெங்கட் பிரபு! | பத்து தல படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள் |
கே.பாலச்சந்தர் இயக்கிய நீர்குமிழி, எதிர்நீச்சல் உள்ளிட்ட சில படங்கள் நாடகத்திலிருந்து நேரடியாக சினிமாவுக்கு வந்தவை. சினிமாவும், நாடகம் போன்றே இருக்கிறது என்ற விமர்சனத்தை சந்தித்தவை. அந்த படங்களில் ஒன்று நவகிரகம். சென்னை சபாக்களில் சக்கைபோடு போட்ட காமெடி நாடகத்தை சினிமாவாக்கினார் கே.பாலச்சந்தர்.
முத்துராமன், நாகேஷ், , ஜி.சகுந்தலா, ராகினி, சிவகுமார், சி.கே.சரஸ்வதி, ஒய்.ஜி.மகேந்திரன், மேஜர் சுந்தர்ராஜன், எம்.ஆர்.ஆர். வாசு, உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. வி. குமார் இசை அமைத்திருந்தார். முழு படமும் ஒரு வீட்டுக்குள்ளேயே எடுக்கப்பட்டது. "உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது..." என்ற பாடல் மட்டும் மெரீனா பீச்சில் எடுக்கப்பட்டிருந்தது.
ஒரே வீட்டில் வசிக்கும் கூட்டுக்குடும்பத்தை சேர்ந்த 9 பேர் 9 விதமான குணாதிசயங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குள் நடக்கும் மோதல், ஈகோ இவற்றை மையமாக கொண்டு மனித மனங்களை படம்பிடித்திருப்பார் கே.பாலச்சந்தர். படம் சுமாராக ஓடினாலும், நாடகம் பெற்ற அளவுக்கு படம் வரபேற்பை பெறவில்லை.