சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தோனி படம் வெளியானது. இதில் தோனியாக சுஷாந்த் நடித்திருந்தார். படம் பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தோனி 2ம் பாகம் எடுக்கும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டிருந்தது. சுஷாந்தும் தோனியின் நட்பை பெற்று அவரது மேனரிசங்கள், பேச்சுவழக்கை கற்று வந்தார். இரண்டாம் பாகத்தில் டோனியின் காதல் பக்கங்கள் படமாக இருந்தது.
தற்போது சுஷாந்த் சிங் மறைவால் தோனி இரண்டாம் பாகத்தை கைவிட்டு விட்டது தயாரிப்பு நிறுவனம். இதுகுறித்து தயாரிப்பாளர் அருண் பாண்டே கூறியிருப்பதாவது: தோனி இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிநடந்து வந்தது. சுஷாந்த் ரொம்பவே ஆர்வமாக இருந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் அந்த முயற்சியை கைவிடுகிறோம். சுஷாந்த் சிங் இல்லாமல் தோனி 2ம் பாகம் சாத்தியமில்லை. உறுதிப்படுத்தப்பட்ட ஒரு படத்தின் வெற்றியை நாங்கள் இழந்திருக்கிறோம். என்கிறார்.