விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களை மூடி 90 நாட்களுக்கும் மேலாகிறது. அடுத்த 100 நாட்கள் கழித்தாவது தியேட்டர்கள் திறக்கப்படுமா என்பது இன்னும் சந்தேகத்தில்தான் உள்ளது.
இந்த ஊரடங்கில் திரைப்படங்களைப் பார்க்க மக்கள் ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பினர். இதனால், திடீரென அவற்றின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. அவர்கள் தங்கள் பக்கம் நிரந்தரமாக தங்க வைத்துக் கொள்ள தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே தங்கள் தளங்களில் படங்களை வெளியிட சில ஓடிடி நிறுவனங்கள் முயன்றன. அதில் அமேசான் நிறுவனம் முந்திக் கொண்டு, ஐந்து மொழிகளில் 7 படங்களை வெளியிடப் போவதாக அறிவித்தது.
அதன்படி மே 29ம் தேதி தமிழ்ப் படமான 'பொன்மகள் வந்தாள்' படம் வெளியானது. கடந்த வாரம் ஹிந்திப் படமான 'குலாபோ சித்தாபோ' வெளியிடப்பட்டது. இந்த வாரம் தமிழ்ப் படமான 'பெண்குயின்' வெளியாக உள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பெண்குயின்' அமேசான் தளத்தில் வெளியாகும். கடந்த மாதம் 'பொன்மகள் வந்தாள்' படம் அப்படி 12 மணிக்கு வெளியாவதற்கு முன்பாகவே பைரசி இணையதளமான தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் இரவு 10.30 மணிக்கு வெளியானது. அதனால், வேறு வழியில்லாமல் அமேசான் தளமும் ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே படத்தை வெளியிட்டது.
கடந்த வாரம் வெளியான 'குலாபோ சித்தாபோ' படமும் உடனடியாக பைரசி தளங்கள் வெளிவந்தது. இன்று நள்ளிரவு வெளியாக உள்ள 'பெண்குயின்' படத்தை தமிழ்ராக்கர்ஸ் முன்னதாக வெளியிட முடியாதபடி அமேசான் ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என்பது தெரியவில்லை.
ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' படம் எதிர்பார்ப்பை அந்த அளவிற்கு பூர்த்தி செய்யவில்லை. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பெண்குயின்' படம் டிரைலர் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை நிறைவேற்றுமா என்பதை இன்றிரவு தெரிந்து கொள்ளலாம்.