'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் 4-வது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் உருவான துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டடித்தன.
தற்போது மீண்டும் அவர்கள் இணைய உள்ள படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படுகிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை கிட்டத்தட்ட 175 கோடி முதல் 200 கோடி வரை பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ராஷ்மிகா, தற்போது கார்த்தியின் சுல்தான் படம் மூலம் தமிழில் நேரடியாக அறிமுகம் ஆகிறார். ஏற்கனவே அவர் விஜய் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ராஷ்மிகாவும் தனது பேட்டிகளில் அதனை வெளிப்படுத்தி வருகிறார். விஜய் 65லாவது ராஷ்மிகாவின் கனவு நிறைவேறுகிறதா என பார்ப்போம்.