Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவின் இன்னொரு பட பஞ்சாயத்து நிறைவு ?

17 ஜூன், 2020 - 15:56 IST
எழுத்தின் அளவு:
Simbu---Ganavelraja-compramise

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிம்பு மீது அடிக்கடி பல குற்றச்சாட்டுகள் வரும், சர்ச்சைகள் எழும். படப்பிடிப்புகளுக்கு அவர் சரியாக வர மாட்டார் என்பதுதான் அதிகமாக பேசப்பட்ட சர்ச்சையாக இருக்கும்.

அந்த சர்ச்சைகளை மீறி மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்தார். சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வந்து நடித்துக் கொடுத்தார் என்றார்கள்.

ஆனால், அதன் பிறகு கன்னடப்படமான 'முப்டி' படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்க ஆரம்பித்தபின் மீண்டும் சரியாக வருவதில்லை என்ற சர்ச்சை எழுந்தது. அதன்பின் அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது.

அடுத்து 'மாநாடு' படத்தில் நடிப்பார், நடிக்க மாட்டார் என செய்திகள் மாறி மாறி வந்து ஒரு வழியாக பஞ்சாயத்து முடித்து படப்பிடிப்பு ஆரம்பமானது.

இப்போது 'முப்டி' பட ரீமேக் பஞ்சாயத்துகளும் நடந்து முடிந்துவிட்டதாம். படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, சிம்பு இடையே சமீபத்தில் பேச்சு வார்த்தை நடந்ததாம். மீண்டும் நடிக்க வருவதாக சிம்பு சொல்லிவிட்டாராம்.

அதனால், 'மாநாடு' படத்தில் நடித்துக் கொண்டே இந்தப் படத்திலும் சிம்பு நடிப்பார் என்கிறார்கள். அது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமானபின்தான் உறுதியாக சொல்ல முடியும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராம்கோபால் வர்மாவை கேள்வி கேட்கும் பூனம் கவுர்ராம்கோபால் வர்மாவை கேள்வி கேட்கும் ... தெலுங்கு சினிமா: குட்டி நிவேதாவின் நன்றி தெலுங்கு சினிமா: குட்டி நிவேதாவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in