Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம்-துருவ் இணையும் படத்தின் தலைப்பு 'திறவுகோல் மந்திரவாதி'?

17 ஜூன், 2020 - 15:08 IST
எழுத்தின் அளவு:
Did-you-know-Vikram---Dhruv-movie-titled

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் முதன்முறையாக தனது மகன் த்ருவ் விக்ரமுடன் நடிக்க இருக்கிறார் விக்ரம். அப்பாவும் மகனும் சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ஏற்கனவே படம் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இப்படதின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதான் என ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் "திறவுகோல் மந்திரவாதி" என அப்படத்திற்கு வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜின் விக்கிபீடியா பக்கத்திலும் தனுஷின் ஜகமே தந்திரம் படத்திற்கு அடுத்ததாக "திறவுகோல் மந்திரவாதி" டைட்டிலில் படம் எடுக்கப் போவதாக உள்ள தகவலால் தான் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் இந்தத் தகவலை இன்னமும் படக்குழு உறுதி செய்யவில்லை. நிறைய பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக படத்தலைப்பை அறிப்போம் என்றும் படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடுத்தர வயதான ஒருவரின் கையில் இருந்து இளைஞரின் கைக்கு துப்பாக்கி வருவது போல் உள்ளது. எனவே இப்படம் கேங்ஸ்டர் படம் என்பது தெளிவாகியுள்ளது. ஆதலால் ஜகமே தந்திரம் போல இப்படத்திற்கும் வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

விக்ரமின் 60 படமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஹீரோயின்கள் பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ?மகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ? சுஷாந்த் தற்கொலை: சல்மான் கான் உட்பட 8 பிரபலங்கள் மீது வழக்கு சுஷாந்த் தற்கொலை: சல்மான் கான் உட்பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in