18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் | 'யாக்கை திரி'க்காக கொல்கத்தா வந்துசேர்ந்த பரத் |
மினிமம் கியாரண்டி நடிகராக வலம் வந்த சல்மான்கானை கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்திற்கு உயர்த்திய படம் தான் தபாங். 2010ல் வெளியான இந்தப்படத்தின் வெற்றி தான் தற்போது வரை இதன் மூன்று பாகங்களில் சல்மான் கானை நடிக்க வைத்துள்ளது. தபாங் படத்தை இயக்கியவர் அபினவ் காஷ்யப்.. இவர் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் சகோதரர்..
தற்போது இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் சில முன்னணி நட்சத்திர குடும்பங்கள் புதியவர்களை வளர விடுவதில்லை என்று இதன் பின்னணியில் பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இந்தநிலையில் தான், தபாங் பட இயக்குனர் அபினவ் காஷ்யப், நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது வளர்ச்சியை எப்படியெல்லாம் தடை செய்ய முயற்சித்தனர் என தனது முகநூல் பக்கத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
தபாங் படத்தை முடித்த பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை சல்மான் கானை வைத்து எடுக்க முயற்சித்தபோது அவரது சகோதரர் அர்பாஸ் கானின் தலையீட்டால் சல்மான் கான் தன்னை ஒதுக்கியதாகவும், பின்னர் தபாங் -2 படத்தை அவரது தம்பியே இயக்கியதாகவும் கூறியுள்ளார் அபினவ். மேலும் சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் போட்டு அதன்மூலம் தன்னை 7 கோடி ரூபாய் கடனில் சிக்க வைக்க முயற்சி செய்தனர் என்றும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலமாக அந்த சிக்கலில் இருந்து சாதுர்யமாக தப்பித்து வந்தேன் என்றும் கூறியுள்ளார் அபினவ் காஷ்யப்..
அதன்பின் தான், தனது எதிரிகள் யார் யார் என கண்டுகொண்டேன் என்றும் இந்த பத்து வருடங்களில் பாலிவுட்டில் தனக்கு எதிராக செயல்படுபவர்கள் என்றால் அது சல்மான் கான், அவரது தந்தை சலீம் கான், அவரது சகோதரர்கள் சோஹைல் கான் மற்றும் அர்பாஸ் கான் ஆகியோர் தான்.. மேலும், எந்த ஒரு காரணத்திற்காகவும் மிரட்டலுக்காகவும் இந்த துறையை விட்டு இறங்கி போக நான் விரும்பவில்லை.. அவர்களா நானா என கடைசி வரை போராடி பார்த்து விடுவோம் என ஒரு முடிவோடு போராடினேன்.. ஆனால் சுஷாந்த் அப்படி ஒரு போராட்டத்துக்கு தயாராக இல்லாமல் தன்னை மாய்த்துக்கொண்டார்.
அதனால் பொறுத்தது போதும்.. இது நாம் திருப்பி தாக்கும் நேரம் இது அவர்கள் விடுத்துள்ள மிரட்டல் அல்ல, நமக்கு விடுக்கப்பட்டுள்ள வெளிப்படையான சவால். இனி ஒரு நடிகர், வாய்ப்பு இல்லாமல் இதுபோன்ற நிலைக்கு ஆளாக கூடாது, இந்த செய்தியை அதிகமாக பகிருங்கள்” என்று கூறியுள்ள அபினவ், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பெண்கள் மீ டூ பிரச்சாரம் துவங்கியது போல, சல்மான் கானுக்கு எதிராக #மீடூ#பாய்காட் சல்மான்கான் என்கிற பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளார்..