இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
எல்லையில் நடந்த மோதலில் 3 இந்திய ராணுவத்தினர் சீன சிப்பாய்களால் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி. வீரமரணம் அடைந்த பழனிக்கு 10 வயது மகன் மற்றும் 2 வயது மகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் ராமநாதபுரத்தில் வசித்து வருகின்றனர்.
பழனி குடும்பத்துக்கு தமிழக அரசு 20 லட்சம் ரூபாய் நிதியும், அரசு வேலையும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரபல தமிழ்பட தயாரிப்பாளர் கொட்டப்பாடி ராஜேஷ், பழனி குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி அறிவித்துள்ளார். இவர் தனது கே.ஜே.ஆர் ஸ்டூடியோ சார்பில் நயன்தாரா நடித்த அறம், ஐரா, பிரபுதேவா நடித்த குலேபகாவலி, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, படங்களை தயாரித்தார் விஸ்வாசம், தபாங் 3 படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் க/பெ.ரணசிங்கம், சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர், அயலான் படங்களை தயாரித்து வருகிறார்.
இது தொடர்பாக கே.ஜே.ஆர் ஸ்டூடியோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பசியுடனும், தாகத்துடனும், குளிருடனும் நின்று, தங்கள் குடும்பத்துக்குக் கதைகள் சொல்ல திரும்பி வரமுடியாத மனிதர்களுக்கு... உங்கள் தியாகத்துக்கு தலை வணங்குகிறோம். உங்கள் ஆன்மாக்கள் அமைதி அடையட்டும். தமிழ் வீரன் பழனியில் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவர் நம்மில் ஒருவர் போன்றவர். அவர் நம் ரணசிங்கம். ஒரு போர்வீரரின் மரணத்தை எந்த பணமும் ஈடு செய்ய முடியாது. ஆனால் இங்கே எங்களால் செய்ய முடிந்த சிறிய உதவி.. பழனியின் தியாகத்துக்காக அவரது குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் வழங்குகிறோம். அவரது ஆன்மா அமைதி அடையட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.