Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜுன் 27ல் பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் மறு மறு மறு மறுமணம் - மாப்பிள்ளை இவர் தான்!

17 ஜூன், 2020 - 09:04 IST
எழுத்தின் அளவு:
Vanitha-to-marry-third-time?

விஜய் நடித்து 1995ம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார். அதன்பின் மாணிக்கம் படத்தில் நாயகியாக நடித்தார். இரண்டு படங்களுமே வெற்றிகரமாக ஓடாத காரணத்தால் அவர் சினிமாவை விட்டு விலகினார்.

2000ம் ஆண்டில் நடிகர் ஆகாஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட வனிதா, 2007ம் ஆண்டில் அவரை விவகாரத்து செய்தார். பின்னர் அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு, 2010ல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் நடன இயக்குனர் ராபர்ட்டுடன், வனிதா லிவிங் டு கெதர் ஆக வாழ்ந்ததாக சொல்லப்பட்டது. அடுத்து அவரை விட்டும் பிரிந்தார் வனிதா.

சினிமா ஹீரோயினாக வனிதாவை தெரிந்ததைவிட கடந்த வருடம் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக வனிதாவைத் தெரிந்தவர்கள் அதிகம். அந்த நிகழ்ச்சியில் தனது அதிரடியான குணம் மூலம் ரசிகர்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டார் வனிதா.

முதல் கணவர் மூலம் ஒரு மகன், ஒரு மகள், இரண்டாவது கணவர் மூலம் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் வனிதாவிற்கு உள்ளனர். இந்நிலையில் இந்த மாதம் வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக கோலிவுட்டில் செய்திகள் வெளியான நிலையில் இப்போது அது உண்மையாகி உள்ளது.




வனிதா திருமணம் செய்ய இருக்கும் 3வது நபர் பெயர் பீட்டர் பால். இவர் ஒரு படம் இயக்குனர் என்கிறார் வனிதா. கொரோனா ஊரடங்கு என்பதால் மிக நெருங்கிய நண்பர்கள் உறவினர்களை மட்டுமே அழைத்து திருமணம் செய்ய இருக்கின்றனர். இவர்களது திருமணம் வருகிற 27ம் தேதி, வனிதாவின் இல்லத்தில் நடைபெறுகிறது.



Advertisement
கருத்துகள் (32) கருத்தைப் பதிவு செய்ய
முதல்வன் - 2  படத்தில் விஜய்!முதல்வன் - 2 படத்தில் விஜய்! சீரியல்களின் புதிய எபிசோட்கள் இன்று முதல் ஒளிபரப்பு, முழுமையாக தொடருமா? சீரியல்களின் புதிய எபிசோட்கள் இன்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (32)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24 ஜூன், 2020 - 07:24 Report Abuse
skv srinivasankrishnaveni முதலில் ஹிந்து அடுத்தவன் கிறிஸ்டியன் அப்போ மூனாவது முஸ்லிமா இல்லே இருக்கவேண்டும்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
23 ஜூன், 2020 - 13:16 Report Abuse
Bhaskaran விரைவில் இன்னொரு திருமணம் செய்து வரலாறு படைக்க வாழ்த்துக்கள் .
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22 ஜூன், 2020 - 19:53 Report Abuse
skv srinivasankrishnaveni மனத்துளே ஹாலிவூட் சடார்னு நெனப்பு அதான் மாத்திக்கின் போவுது கஸ்மாலம்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
22 ஜூன், 2020 - 05:09 Report Abuse
meenakshisundaram ஐயோ பாவம் Vijay குமார் ,எத்தினி மாப்பிள்ளைங்க அவருக்கு ?இந்த வருஷம் 'தலை தீபாவளி '?-அது சரி கொஞ்சம் சின்ன பையனா பாத்திருக்கலாமே கூட கொஞ்சம் வருஷம் வண்டி ஓடுமே ,
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
20 ஜூன், 2020 - 00:18 Report Abuse
Sathish அட விடுங்கப்பா. குளிர் காலம் வேற வரப்போகுது. இப்பவே குளிர் தாங்க முடியல.
Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in