Advertisement

சிறப்புச்செய்திகள்

'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுஷாந்த் தற்கொலைக்கான காரணம் : பரபரப்பை கிளப்பும் கங்கனாவின் வீடியோ

16 ஜூன், 2020 - 18:46 IST
எழுத்தின் அளவு:
Sushant-dead---Kangana-slams-bollywood-industry

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடந்து வரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பலர் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். ஓட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் குறிப்பிட்ட சிலரின் கைகளில் சிக்கி இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் சுஷாந்த் தற்கொலைக்கான காரணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பற்றி சிலர் புதுபுதுக் காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சுஷாந்துக்கு திடமான மனம் இல்லை என்கிறார்கள். அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்றவர் சுஷாந்த். அவர் என்ஜினியரிங் நுழைவுத் தேர்வில் ரேங்க் வாங்கியவர். அவர் எப்படி பலவீனமான மனதை கொண்டிருக்க முடியும்.

பாலிவுட் திரையுலகம் சுஷாந்தை முறையாக நடத்தவில்லை. அவருக்கு போதிய திறமை, நல்ல நடிப்பு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள் கொடுத்த போதிலும், திரையுலகம் அவருக்கு முறையான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. தனது படங்களை பார்க்கும்படி சுஷாந்த் கெஞ்சிக் கேட்டிருக்கிறார். எனக்கு காட்ஃபாதர் யாரும் இல்லை. அதனால் தயவு செய்து என் படங்களை பாருங்கள். இல்லை என்றால் என்னை இங்கிருந்து அனுப்பி விடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அவரது முதல் திரைப்படமான கை போ சேவில் அவரது நடிப்பு ஏன் பெரிய அளவில் பேசப்படவில்லை? எம்.எஸ்.தோனி, கேதர்நாத் முதல் அவர் கடைசியாக நடித்த சிச்சோரே வரை அவரது படங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சிச்சோரே போன்ற ஒரு அற்புதமான படம் புறக்கணிக்கப்பட்டு, கல்லி பாய் போன்ற மோசமான படத்திற்கு அனைத்து விருதுகளும் வழங்கப்பட்டது ஏன்?

என்னுடைய படங்களுக்கும் இதேநிலை தான். நான் நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகியும் பிளாப் என்கிறார்கள். என்னுடைய படைப்புகளை ஆதரிக்க மறுப்பது ஏன்? ", என கங்கனா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
சென்னை மீளும் - விவேக்சென்னை மீளும் - விவேக் நேர்கொண்ட பார்வை ரீமேக்கில் நடிக்க ஸ்ருதிக்கு இத்தனை லட்சம் சம்பளமா? நேர்கொண்ட பார்வை ரீமேக்கில் நடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

kattus - chennai,இந்தியா
17 ஜூன், 2020 - 13:09 Report Abuse
kattus vijay sethupathiyai super star akkiya ulagam ithu
Rate this:
maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
17 ஜூன், 2020 - 07:06 Report Abuse
maruthu pandi The man who has passed entrance test in Delhi college of Engineering and Indian School of mines. Why he cannot withstand the failure in movies? Failure is not final. Even if he fails in movies , So what? ing himself is not the solution. He might had worse depression. A man kilss himself s all his dear ones . Also the young geneartion will follow his bad decision during the failure in life. He is any way a coward.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17 ஜூன், 2020 - 06:25 Report Abuse
Sanny I think he has his carrier in wrong way, He is very keen in education, then why he want to be a actor.
Rate this:
prabhu - ,
17 ஜூன், 2020 - 15:06Report Abuse
prabhuthat is his passion.he too have 50 dreams.dont tell someone what to have become...
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17 ஜூன், 2020 - 04:12 Report Abuse
J.V. Iyer unmai.. unmai.. unmaiyaana karuththukkalai thairiyamaaga koorungal ammani.
Rate this:
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
17 ஜூன், 2020 - 01:14 Report Abuse
Saravanan AE She is right. The Central Government should take serious note of this.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in