Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிருத்விராஜ் பட இயக்குனர் கவலைக்கிடம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

16 ஜூன், 2020 - 17:24 IST
எழுத்தின் அளவு:
Director-Sachy-in-critical-stage

நடிகர் பிருத்விராஜ் திரைவாழ்வில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், பிளாக்பஸ்டர் ஹிட் என்றால் அது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான அய்யப்பனும் கோசியும் படம் தான். இந்த படத்தை இயக்கியவர் சாச்சி என செல்லமாக அழைக்கப்படும் கே.ஆர்.சச்சிதானந்தன்.

அய்யப்பனும் கோசியும் படத்திற்கு முன்பே பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனனை வைத்து அனார்கலி எனும் படத்தை சாச்சி இயக்கியுள்ளார். அதுவும் ஹிட் படம் தான். திலீப்பின் ராம்லீலா, மோகன்லாலின் ரன் பேபி ரன் ஆகிய படங்களுக்கு திரைக்கதை அமைத்தவரும் சாச்சி தான். இரண்டுமே சூப்பர் ஹிட் படங்கள்.

இந்நிலையில் இயக்குனர் சாச்சிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. முதலாவது அறுவை சிகிச்சை முறையாக நடந்துள்ளது. இரண்டாவது அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுக்கப்பட்டத்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சாச்சியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சாச்சியின் மூளை செயலிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மலையாள திரையுலகம் கவலையில் இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரவிதேஜா படத்தை நிராகரித்த மாளவிகா மோகனன்ரவிதேஜா படத்தை நிராகரித்த மாளவிகா ... முதல் ஆளாக படப்பிடிப்பை துவங்கினார் சண்டக்கோழி வில்லன் முதல் ஆளாக படப்பிடிப்பை துவங்கினார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in