Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆனந்தியாய், கனியாய் வந்த பக்கத்து வீட்டு பொண்ணு அஞ்சலிக்கு பிறந்தநாள்

16 ஜூன், 2020 - 16:34 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-actress-Anjali

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் மட்டுமே எதார்த்தமாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் நடிகை அஞ்சலி. பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கே என இவருடைய படங்களின் விமர்சனங்களில் காண முடியும், ரசிகர்கள் சொல்லி கேட்க முடியும். அந்தளவுக்கு ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் மனதை ஈர்த்தன. தெலுங்கை பூர்வீமாக கொண்டாலும் நன்றாக தமிழ் பேசுவர்.

ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதில் அவர் ஏற்று நடித்த ஆனந்தி கதாபாத்திரமும் சரி, அதன்பின் அங்காடித் தெருவில் வந்த கனி கதாபாத்திரமும் சரி, எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் மணிமேகலை கதாபாத்திரமும் சரி... அவர் நடித்த ஒவ்வொரு படங்களிலும் அவரது நடிப்பு பேசியது.

அதன்பின் கமர்ஷியல் நாயகியாக மாறியவர், இடையில் சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகளால் சினிமாவில் அவரால் சில காலம் சாதிக்க முடியாமல் போனது. அவர் நடித்த படங்களும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. பின் அந்த பிரச்னைகளில் இருந்து மீண்டு, மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அனுஷ்கா உடன் அவர் நடித்துள்ள நிசப்தம் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 34வது வயதில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு ரசிகர்கள் ஏராளமானபேர் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்த் சிங் குடும்பத்தில் நேற்று மற்றொரு மரணம்சுஷாந்த் சிங் குடும்பத்தில் நேற்று ... மத்திய அரசுக்கு பெப்சி கோரிக்கை மத்திய அரசுக்கு பெப்சி கோரிக்கை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in