Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'லட்சுமி பாம்' ஆகஸ்ட் 15ல் ஓடிடி ரிலீஸ்

16 ஜூன், 2020 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Laxmi-Bomb-releasing-in-Ott-on-Aug-15

தமிழில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த 'காஞ்சனா' படம் ஹிந்தியில் அக்ஷய்குமார் நடிக்க 'லட்சுமி பாம்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. ராகவா லாரன்ஸ் இயக்கும் முதல் ஹிந்திப் படமான இப்படம் கொரானோ ஊரடங்கு காரணமாக தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

அமேசான் பிரைம் நிறுவனம் கடந்த மாதம் ஐந்து மொழிகளில் ஏழு படங்களை அடுத்தடுத்து நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடும் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 'பொன்மகள் வந்தாள்', 'குலாபோ சித்தாபோ' ஆகிய படங்கள் வெளியாகின. இந்த வாரம் 'பெண்குயின்' படம் வெளியாக உள்ளது.

அது போல ஹாட்ஸ்டார் நிறுவனமும் எட்டு படங்கள் வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தெரிகிறது. அவையனைத்தும் ஹிந்திப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 'லட்சுமி பாம்' படமும் ஒன்று. ஆகஸ்ட் 15ம் தேதியன்று இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது. மிகப் பெரும் தொகை கொடுத்து 'லட்சுமி பாம்' படம் வாங்கப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் அடுத்து ஹாட்ஸ்டார் நிறுவனமும் இப்படி நேரடி வெளியீட்டில் இறங்கியது போலவே மற்றொரு முன்னணி நிறுவனமான நெட்பிளிக்ஸ் கூட இப்படியொரு அறிவிப்பை வெளியிட உள்ளது என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அனுஷ்கா சர்மாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்அனுஷ்கா சர்மாவுக்கு நீதிமன்றம் ... சல்மான்கான் மீது தபாங் இயக்குனர் சரமாரி குற்றச்சாட்டு சல்மான்கான் மீது தபாங் இயக்குனர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in