Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாற்றம் மெதுவாக வரும், அதிகம் கற்போம் - அனுஷ்கா

15 ஜூன், 2020 - 17:22 IST
எழுத்தின் அளவு:
Change-will-come-slow,-learn-more-says-Anushka

'பாகுபலி' நடிகை அனுஷ்கா முகப்புத்தகத்தில் ஒரு நீண்ட பதிவொன்றை போட்டிருக்கிறார். 'மாற்றம் மெதுவாக வரும், அதிகம் கற்போம்' என அவருடைய புகைப்படத்திலேயே வாசகங்களைப் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவில் அவர் கூறியுள்ளதாவது, நமக்கு தெரிந்த ஒரு சூழ்நிலையை மட்டுமே கையாள முடியும்.. யாரும் எப்போதும் சரியானவர்கள் இல்லை.....

சரியான வழி, தவறான வழி எதுவும் இல்லை. வாழ்க்கை வாழ நாம் சாலை வரைபடத்துடன் பிறக்கவில்லை, ... நமது வழியில் பெரியவர்கள், சிறியவர்கள் என்பது பாதிப்பை ஏற்படுத்தும்.

நாம் ஒவ்வொருவரும் உள்ளுக்குள் உடைந்து விடுவோம், அது பரவாயில்லை. சிலர் அமைதியாக அழுகிறார்கள், சிலர் உதவி வேண்டி அழுகிறார்கள், சிலர் கவனத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். சிலர் தங்கள் சொந்த வழிகளைக் கண்டு கொள்கிறார்கள், சிலர் ஆதரவற்றர்வகளாக இருக்கிறார்கள்.

நமது சொந்த உடைந்து போன வழியில் மற்றவர்களிடமிருந்து சிலவற்றைக் கற்றுக் கொள்வோம். மற்றவர்களிடம் கனிவாக நடந்து கொள்வோம். மற்றவர்களைப் புரிந்து கொள்வோம். மற்றவர்களிடம் இன்னும் இரக்கமுடன் நடந்து கொள்வோம். இன்னும் அன்பாக இருக்கக் கற்றுக்கொள்வோம். அதிகமாகக் கேட்கவும், தொடர்பு கொள்ளவும், பலவீனமாக இருக்கவும், வலிமையாக இருக்கவும் கற்றுக் கொள்வோம்.

உள்ளுக்குள் என்ன நினைக்கிறோமோ அதை அனைவரும் கற்றுக் கொண்டு, அதைத் தழுவி வளர்வோம். நாம் அனைவரும் மனிதர்கள். ஒரு சிரிப்பு, கேட்பது, மென்மையான தொடுதல், தெரியாத மற்றொரு நபருக்கு நமது இருப்பு நம் புரிதலை விட வித்தியாசத்தை ஏற்படுத்தும்...

இந்த நேரத்தில் நம்மால் அனைத்தையும் மாற்றி தீர்க்க முடியாமல் போகலாம்.. ஆனால் ஒரு அடி வித்தியாசத்தை ஏற்படுத்தும்... அவர்கள் சொல்வது போல் மாற்றங்கள் மெதுவாக நடக்கும் மில்லியன் கணங்களில்.... பாதுகாப்பாக, பத்திரமாக, புன்னகையுடன் இருங்கள், நாம் அனைவரும் மனிதர்கள்,” என்று எழுதியிருக்கிறார்.

நேற்று தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தால் மனமுடைந்து அனுஷ்கா இப்படி எழுதியிருக்கிறார் போலிருக்கிறது. அனுஷ்காவின் ஒவ்வொரு வரியும் அர்த்தம் பொதிந்துள்ளவை என்பதை மறுக்க முடியாது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டிவி தொடர் படப்பிடிப்புகள் நடைபெறாது ?டிவி தொடர் படப்பிடிப்புகள் ... 24 படத்தில் சூர்யாவுக்கு முன் விக்ரம் ; இயக்குனர் புது தகவல் 24 படத்தில் சூர்யாவுக்கு முன் விக்ரம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

16 ஜூன், 2020 - 11:39 Report Abuse
abivijay tejas super.......nice lines
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in