பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? |
தமிழில், நட்பதிகாரம் 79 படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை தேஜஸ்வி மடிவாடா. அங்கு 'மனம், ஹார்ட் அட்டாக், சுப்ரமணியம் பார் சேல், ஸ்ரீரீமந்துடு' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கமிட்மென்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். தேஜஸ்வி தெலுங்கு மீடியா ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி, டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. படுக்கையை பகிர்ந்து கொள்ள சம்மதிப்பதால் தான் மும்பை நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: சினிமாவில் வாய்ப்பு தருவதாகச் சொல்லி பெண்களை கவர்ந்து இழுக்க நினைக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இந்த செயலில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலான நடிகைகள், இந்த பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். இதன் காரணமாக சினிமாவில் இருந்து வெளியேறிவிடலாமா என்று கூட முடிவு செய்தேன். சினிமா துறையில் 90 சதவிகிதம் இந்தப் பிரச்னை இருக்கிறது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கத்தை சினிமாவில் இருந்து அடியோடு ஒழிக்க வேண்டும்.
மும்பை நடிகைகள், பட வாய்ப்புக்காக, மனரீதியாக இதற்கு தயாராகி விடுகிறார்கள். அதனால் தான், உள்ளூர் நடிகைகளை விட அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. தென்னிந்திய நடிகைகள் பிகினி உடை, முத்தக்காட்சி போன்றவற்றில் நடிப்பதற்கு கூட கூச்சப்படுவார்கள். பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் பற்றி தென்னிந்திய நடிகைகள் அறிந்திருந்தாலும் அதற்கு அவர்கள் தயாராக இல்லை.
நான் ஒருவரை காதலித்து வந்தேன். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தோம். ஆனால் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் வழக்கம் சினிமாவில் இருப்பதால் என்னையும் தவறாக புரிந்து கொண்டு காதலை முறித்துவிட்டார்.
இவ்வாறு தேஜஸ்வி கூறியுள்ளார்.