Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால்-வினயன் கூட்டணியில் உருவாகும் பத்தொன்பதாம் நூற்றாண்டு

13 ஜூன், 2020 - 17:35 IST
எழுத்தின் அளவு:
Vinayan-movie-with-actor-mohanlal

மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர் வினயன். தமிழில் விக்ரம் நடித்த காசி மற்றும் அற்புத தீவு உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இவர் மோகன்லால் நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்க உள்ளார். படத்திற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் மோகன்லால் பெண்களின் உரிமைக்காக போராடிய ஆராட்டுப்புழா வேலாயுத பணிக்கர் என்கிற மாவீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்தப்படத்திற்காக தற்போது இசையமைப்பாளர் எம்.ஜெயச்சந்திரனுடன் இணைந்து பணிகளை துவக்கியுள்ளார் வினயன்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இயக்குனர் வினயனுக்கும் நடிகர் மோகன்லாலுக்கும் பல வருடங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மோகன்லாலை மறைமுகமாக தாக்கி பேட்டி கொடுத்து வந்தார் இயக்குனர் வினயன். ஆனால் எதிர்பாராத திருப்பமாக கடந்த வருடம் மோகன்லாலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய இயக்குனர் வினயன், தாங்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அடுத்தநாளே ஒரு தகவலை வெளியிட்டு ஆச்சரியப்பட வைத்தார். இந்தப்படம் தான் தற்போது பத்தொன்பதாம் நூற்றாண்டு என்கிற பெயரில் தயாராக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுனிலுக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்சுனிலுக்கு அதிர்ச்சி கொடுத்த ... பாலைவனத்தில் கிரிக்கெட் ஆடிய பிரித்விராஜ் பாலைவனத்தில் கிரிக்கெட் ஆடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in