விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
ராணா நடிப்பில் வெளிவருவதற்கு தயார் நிலையில் இருக்கும் படம் காடன்.. பிரபு சாலமன் இயக்கத்தில் ராணாவுடன் விஷ்ணு விஷாலும் இணைந்து நடித்துள்ளார். இந்தப்படம் தெலுங்கில் ஆரண்யா, இந்தியில் ஹாத்தி மேரா ஷாத்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. காட்டில் வாழும் யானையின் பழக்க வழக்கங்களை மாற்றுவதால் ஏற்படும் நிகழ்வுகளையும் யானைப்பாகனின் வாழக்கையையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாக்கி உள்ளது.
இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய ராணா, இதற்குமுன் நான் நடித்த படங்களுடன் ஒப்பிடும்போது, அவ்வளவு ஏன் பாகுபலியை விட இந்தப்படத்தில் நடிக்கும்போது தான் மிகவும் சிரமப்பட்டேன்.. சுமார் 150--170 கிலோ எடையுள்ள யானையின் தந்தத்தை தோளில் போட்டுக்கொண்டு சுமந்தபடி நடிப்பது என்றால் சும்மாவா..?” என கூறியுள்ளார். கடந்த ஏப்-2ஆம் தேதியே வெளியாகவேண்டிய இந்தப்படம் ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பியதும் உடனடி ரிலீஸுக்கு தயாராகும் என்று சொல்லப்படுகிறது.