Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேனீக்களிடம் வசமாக சிக்கிய கீர்த்தி சுரேஷ்

12 ஜூன், 2020 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Keerthy-Suresh-suffer-by-honey-bee

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ள படம் பெண்குயின். இந்த படத்தை இயக்கி இருப்பவர் ஈஸ்வர் கார்த்திக். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியதில்லை. குறும்படங்கள்கூட எடுத்ததில்லை.

அப்படிப்பட்ட தனக்கு பென்குயின் வாய்ப்பு எப்படி வந்தது என்பது பற்றி ஈஸ்வர் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியாதாவது, "நாடகங்களில் தான் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த அனுபவம் தான் எனக்கு படம் இயக்கும் தைரியத்தை கொடுத்தது. நடிகர் விஜய் சேதுபதி என்னுடைய நலம் விரும்பி. இந்த பட வாய்ப்பு கிடைக்க அவர் தான் உதவினார். அதேபோல் என் மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரிக்க முன் வந்த கார்த்திகேயன், சாந்தானத்திற்கு நன்றி.

எனது முதல் படம் கதாநாயகியை மையப்படுத்திய படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். 18 நாட்களில் பெண்குயின் கதையை எழுதி முடித்தேன். ஒரு சாதாரணமான பெண் எப்படி ஒரு அசாதாரணமான சூழலை வெல்கிறாள் என்பதே படத்தின் கதைக்கரு. தயாரிப்பாளர்களிடம் நான் கதையை சொன்ன உடனே, கீர்த்தி சுரேஷ் நடித்தால் சரியாக இருக்கும் என அவர்கள் முடிவு செய்தனர். கீர்த்தி ஒத்துக்கொள்ளவில்லை என்றால் வேறு இரண்டு நடிகைகளை மனதில் வைத்திருந்தேன். ஆனால் நான் கதையை சொன்னதுமே கீர்த்தி ஓகே சொல்லிவிட்டார். படத்தில் அவருக்கு ஒரு சிறு குழந்தையின் தாய் வேடம். இதற்கு முன்பு அவர் இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. மிக அருமையாக நடித்திருக்கிறார்.

பெண்குயின் ஒரு திரில்லர் படம். எனவே அதன் கதையை சொல்வது மிகவும் கடினமானது. படத்தில் நிறைய சஸ்பென்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு இருபது நிமிடத்திற்கும் ஓரு சன்பென்ஸ் காட்சி இருக்கும். இது ஒரு தாய்க்கும் மகனுக்குமான உறவு பற்றிய படம். ஒரு தாய் தனது மகனின் உயிரை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போவாள் என்பதே கதை.

இந்த படத்தை கொடைக்கானல் மலைப்பகுதியில் தான் படம்பிடித்தோம். மாலை 5 மணிக்கு மேல் படப்பிடிப்பு நடத்த முடியாது. திடீரென மேகம் இருண்டு மழை வந்துவிடும். இந்த சூழ்நிலைகளை எல்லாம் சமாளித்து 36 நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம்.

ஒரு நாள் படப்பிடிப்பின் போது தேன் கூட்டில் லைட் வெளிச்சம் பட்டு, தேனீக்கள் கலைந்துவிட்டன. தேனீக்கள் எல்லாம் எங்களை நோக்கி படையெடுத்து வந்துவிட்டன. கீர்த்தியும் தேனீக்களிடம் சிக்கிக்கொண்டார். எங்கள் படக்குழுவை சேர்ந்த நான்கு பேர் இதில் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, நிலைமை சரியானதும் தான் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினோம்.

படத்தில் வரும் முகமூடி மனிதன் யார் என்பது எங்கள் படக்குழுவை சேர்ந்த 80 சதவீதம் பேருக்கு தெரியாது. ஒரு சில பேருக்கு தான் அவர் யார் என்பது தெரியும். ஏன் கீர்த்தியிடம் கூட மிக தாமதமாக தான் முகமூடி மனிதன் யார் என்பதை தெரிவித்தோம். பெண்குயின் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் எனும் நோக்கில் தான் எடுத்தோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கொரோனா பிரச்சினையால் வேறு வழியில்லாமல் தான் ஓடிடியில் ரிலீஸ் செய்கிறோம்.

பெண்களை கவுரவப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் தான் படத்திற்கு பெண்குயின் என பெயர் வைத்தோம். பெண் குயின் என்பது தான் அதன் பொருள். ஆணாதிக்கம் மிகுந்த இந்த சமூகத்தில் பெண்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள எப்படி எல்லாம் போராடுகிறார்கள் என்பதை நாம் தினமும் பார்க்கிறோம். எனவே தான் இந்த டைட்டில்", என்கிறார் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ஜிம் பாடி வித் நோ தாடி' - பிருத்விராஜ் மனைவி மகிழ்ச்சி'ஜிம் பாடி வித் நோ தாடி' - ... நரகாசுரன் பெயரை மாற்றிய கார்த்திக் நரேன் நரகாசுரன் பெயரை மாற்றிய கார்த்திக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in