விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
மலையாள நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ், 'ஆடுஜீவிதம்' படத்திற்காக நீண்ட தாடி ஒன்றை வளர்த்திருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்டான் நாட்டிற்குச் சென்றிருந்த போது கொரானோ ஊரடங்கு காரணமாக அங்கேயே மாட்டிக் கொண்டார்.
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரும் 50க்கும் மேற்பட்ட படக்குழுவினரும் கேரளா திரும்பினார்கள். பின்னர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனையையும் மேற்கொண்டார் பிருத்விராஜ்.
'ஆடுஜீவிதம்' படத்திற்காக அவர் வளர்த்திருந்த தாடியை தற்போது எடுத்துவிட்டார். முற்றிலும் ஷேவ் செய்யப்பட்ட அவருடைய புதிய தோற்றத்தை பிருத்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “கடைசியாக, ஜிம் பாடி வித் நோ தாடி' எனக் குறிப்பிட்டுள்ளார்.