Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐஸ்வர்யா ராய் போல் 'அசத்தும்' சிலர்

12 ஜூன், 2020 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Some-girls-look-like-Aishwaryarai

உலகத்தில் ஒருவரைப் போல ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்வார்கள். அவர்களில் ஓரிருவரைப் பார்த்தால் கூட ஆச்சரியம்தான். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்கள், இணையதளங்களில் ஐஸ்வர்யா ராய் போல இருக்கும் மூவரைப் பற்றிய தகவல்கள் அதிகமாகப் பரவியுள்ளன.

அதற்குக் காரணம் கேரளாவைச் சேர்ந்த 'அம்முஸ் அம்ருதா'வின் டிக் டாக் வீடியோக்கள். 'கண்டுகொண்டேன் கண்டுகொன்டேன்' படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் போல அச்சு அசலாக அவர் பேசி நடித்த வீடியோ உள்ளிட்ட பல வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதனால் அவருக்கு ஒரு மலையாளப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கூட வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராய் போன்று சாயல் கொண்ட மற்ற இருவரில் ஒருவர் மராத்தி நடிகையான மானஸி நாயக். இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அடுத்தவர் இரானிய மாடல் நடிகையான மலகா ஜாபெரி. உலகில் மிக அழகான பெண் என்ற பெருமையை ஒரு வாக்குப் பதிவில் அவர் பெற்றுள்ளாராம். தற்போது அமெரிக்காவிற்குச் சென்று மாடலிங் செய்ய ஆரம்பித்துள்ளாராம்.

ஐஸ்வர்யா ராயைப் போல மூவர் இருந்தாலும் கேரளாவைச் சேர்ந்த அம்ருதா தான் அச்சு அசலாக அவரைப் போலவே இருக்கிறார். மற்ற இருவரும் ஓரளவிற்குத்தான் ஐஸ்வர்யா ராய் போல இருக்கிறார்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மூடப்படும் நிலையில் மேலும் சில தியேட்டர்கள்மூடப்படும் நிலையில் மேலும் சில ... 'ஜிம் பாடி வித் நோ தாடி' - பிருத்விராஜ் மனைவி மகிழ்ச்சி 'ஜிம் பாடி வித் நோ தாடி' - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in