திருமணத்திற்கு பிறகு ஆனந்தி நடிக்கும் தமிழ் படம் | முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் |
கொரோனா ஊரடங்கு அனைத்துத் தொழில்களையும் அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருந்தே செய்தால் கூட போதுமானது என்ற அளவில் உள்ள சில தொழில்கள் மட்டுமே ஓரளவிற்கு தொடர்ச்சியாக நடக்கின்றன.
கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தொழிலாக சினிமாத் துறை இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னதாகத்தான் டிவி தொடர் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், சினிமா படப்பிடிப்புகள் ஆரம்பமாகவில்லை. சுமார் மூன்று மாத காலமாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் உலகம் முழுவதும் பல தியேட்டர்கள் மூடப்படலாம் என்ற செய்தி வெளிவந்தது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களைக் கொண்ட சீனாவில் கூட பல தியேட்டர்களை மூட ஆரம்பித்துவிட்டார்களாம்.
தற்போது அது போன்ற ஒரு நிலை தமிழ்நாட்டிலும் ஆரம்பமாகி உள்ளது. சென்னையில் உள்ள பழைய தியேட்டர்களான ஏவிஎம் ராஜேஸ்வரி, மகாராணி ஆகிய தியேட்டர்கள் மூடப்படுகின்றன. இன்னும் 50 தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு துபாயில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், அங்கு மக்களின் வருகை மிகவும் குறைவாக இருந்ததை அடுத்து அங்கு மீண்டும் தியேட்டர்களை மூட உள்ளார்களாம்.
எனவே, அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் கூட தொற்று பயம் காரணமாக மக்கள் வர மாட்டார்கள் என்றே கருதுகிறார்கள். இதை சமாளிக்க என்ன செய்யலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் தீவிரமாக விசாரித்து வருகிறார்களாம்.