Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் பட வாய்ப்பை நிராகரித்த ரஜினி

11 ஜூன், 2020 - 19:33 IST
எழுத்தின் அளவு:
Rajini-says-no-to-Dhanush-film

தனுஷின் நான் ருத்ரன் படம் தான் கோலிவிட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக். கைவிடப்பட்டதாக கருதப்பட்ட படத்தை தனுஷ் மீண்டும் எடுக்கப்போவதாக செய்தி வெளியானதில் இருந்து கொரோனாவையும் மீறி பரபரப்பாகியுள்ளது கோலிவுட்.

தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள நான் ருத்ரன் வரலாற்று படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பது தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா. அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார். இவர்களுடன் சரத்குமார், எஸ்.கே.சூர்யா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தனுஷும் கெஸ்ட் ரோல் செய்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நான் ருத்ரன் படத்தில் ஹீரேவாக நடிக்க முதலில் ரஜினியிடம் தான் கால்ஷீட் கேட்டிருக்கிறார் தனுஷ். ஆனால் தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தனுஷ் பட வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம் ரஜினி.

அதன் பிறகு தான் நாகார்ஜுனாவிடம் கதை சொல்லியிருக்கிறார் தனுஷ். அவருக்கு கதையும், கதாபாத்திரமும் பிடித்து போகவே உடனே ஓகே சொல்லிவிட்டாராம். எனவே ரஜினி நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் தான் நாகார்ஜுனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் பிறந்தநாளில் 'மாஸ்டர்' டிரைலர் வருமா ?விஜய் பிறந்தநாளில் 'மாஸ்டர்' ... மீண்டும் பட வேலையை ஆரம்பித்த ரகுல் ப்ரீத் சிங் மீண்டும் பட வேலையை ஆரம்பித்த ரகுல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

GOVINDAN - chennai,இந்தியா
13 ஜூன், 2020 - 19:22 Report Abuse
GOVINDAN Good choice. Fittest for the roll. If Rajini, some unnecessary spices may have to be added compulsorily. Now it is not necessary. Will super hit without super star. Akkineri Nagarjuna's Annamayya, and Baktha Ramadasu are the block busters.
Rate this:
Vijay - Chennai,இந்தியா
12 ஜூன், 2020 - 09:51 Report Abuse
Vijay படம் ஓடுது ஓடுது நீங்க தான் சொல்றீங்க ஆனால் விநியோகிஸ்தர்கள் வேறு மாதிரி அல்லவே சொல்கிறார்கள்
Rate this:
12 ஜூன், 2020 - 01:52 Report Abuse
சந்தோஷ் ரஜினியின் வாய்ப்பை தவற விட்ட தனுஷ்ணு போடுங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in