18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'பெண்குயின்' படம் அடுத்த வாரம் ஜுன் 19ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
கடந்த வாரம் வெளியான படத்தின் டீசர் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தாத நிலையில் இன்று(ஜுன் 11) வெளியான டிரைலரைப் பார்த்த போது ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் படத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது.
காணாமல் போன தன் குழந்தையைத் தேடி அலைகிறார் அம்மா கீர்த்தி சுரேஷ். ஒன்று அவரது குழந்தை யாராலோ எதற்காகவோ கடத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது கொல்லப்பட்டிருக்க வேண்டும். கடத்தல்காரன் யார் என்பதை கீர்த்தி தேடிக் கண்டுபிடிக்கிறாரா அல்லது கொலைகாரனை பழி வாங்கத் துடிக்கிறாரா என்பதுதான் டிரைலரைப் பார்த்து நாம் புரிந்து கொள்ளும் கதையாக உள்ளது.
படம் பெரும்பாலும் இரவு நேரக் காட்சிகளாக எடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. ஊட்டியின் பேரமைதியான காடு சார்ந்த இயற்கையும் மேலும் பயத்தைக் கூட்டுகிறது. இந்தப் படத்தை 50 இன்ச் சின்னத்திரையில் 50 அடி பெரியதிரையில் தான் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது.
பாசமான அம்மாவாக கீர்த்தி சுரேஷ் சென்டிமென்ட் மழையில் நனைய வைக்கப் போகிறார். அந்த கொலைகாரன் அல்லது கடத்தல்காரன் யார் என்று தெரியவில்லை. ஆனால், அவருக்கு சார்லி சாப்ளின் மாஸ்க் மாட்டிவிட்டிருப்பது மட்டுமே நெருடலாக உள்ளது.
பெண்களை மையப்படுத்திய படங்களும், த்ரில்லர் படங்களும் ஓடிடி தளங்களில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படுகிறது. இந்த கொரானோ ஊரடங்கில் அப்படிப்பட்ட படங்களைப் பார்த்தவர்கள்தான் அதிகம். அவர்களது எதிர்பார்ப்பை இந்தப் படம் ஈடு செய்யுமா என்பதை ஒரு வாரம் கழித்து பார்ப்போம்.