திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை | நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம் | நடிகை ஜமுனாவின் வாழ்க்கை படத்தில் தமன்னா | மறக்க முடியுமா? இம்சை அரசன் 23ம் புலிகேசி | பருத்திவீரன், சாஹோ, சண்டக்கோழி-2 : ஞாயிறு திரைப்படங்கள் |
விஜய் டிவியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி புதிய கான்செப்ட் ஆக இருந்ததால் தமிழ் டிவி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. முதல் சீசனில் பங்கேற்ற ஓவியாவின் குழந்தைத்தனமான செயல்களும், அதன்பின் பாதியில் அவர் போட்டியை விட்டு விலகியதும் பரபரப்பை ஏற்படுத்தி நிகழ்ச்சிக்கு பெரிய விளம்பரத்தை இலவசமாகத் தேடிக் கொடுத்தது.
இரண்டாவது சீசன் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக கடந்த ஆண்டு ஒளிபரப்பான மூன்றாவது சீசனில் கவின் - லாஸ்லியா காதல் என்ற சர்ச்சை, வனிதாவின் விதண்டாவாதம், சேரனின் இயல்பான அணுகுமுறை, தர்ஷன், முகேன் ஆகியோரின் முயற்சி என பரபரப்பாகவே போனது.
வழக்கமாக ஜுன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரங்களில் ஆரம்பமாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் கடைசி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் முடிவடையும்.
இந்த வருடம் ஜுன் 10 தேதி ஆன பிறகு நிகழ்ச்சி பற்றி எந்த ஒரு ஏற்பாடும் நடக்கவில்லை. வழக்கமாக நடைபெறுவதைப் போல் இந்த வருடம் நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
கொரானோ ஊரடங்கு காரணமாக சமூக இடைவெளி இல்லாமல் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களும், நிகழ்ச்சிக்குப் பின் பணியாற்றும் 400 பேரும் இருக்க முடியாது.
மேலும், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சூழ்நிலையில் சினிமா படப்பிடிப்பை நடத்துவதும், தியேட்டர்களைத் திறப்பதும் அவசியமானவை அல்ல என்று தெரிவித்திருந்தார்.
டிவி நிர்வாகமே நடத்த முயற்சித்தாலும் கமல்ஹாசன் அதற்கு சம்மதித்து வரமாட்டார் என்றே தெரிவிக்கிறார்கள். எனவே, இந்த வருட 'பிக் பாஸ் சீசன் 4' கொரானோ தொற்று முற்றிலும் போகாத வரை நடைபெற வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.