12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' | ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார் | கேஜிஎப் படத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | மோகன்லால் மீதான யானை தந்தம் வழக்கு: 3 வாரத்தில் விசாரணையை முடிக்க கோர்ட் உத்தரவு | ஆட்டோவில் சென்ற நடிகையிடம் அத்துமீறிய போலீஸ் | ராம் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் | சேகர் படத்தின் தடை நீக்கம் ; மறு ரிலீஸ் தேதி பரிசீலனை |
நடிகர் சிரஞ்சீவி தலைமையில் தெலுங்கு திரைப்படநடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் ராஜமவுலி, தயாரிப்பாளர்கள் சி.கல்யாண், தில்ராஜு உள்பட தெலுங்கு திரையுலக பிரமுகர்கள் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தனர். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது. சந்திப்புக்கு பிறகு நடிகர் சிரஞ்சீவி நிருபர்களிடம் கூறியதாவது:
ஏற்கெனவே தெலங்கானாவில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் வரும் 15ம் தேதிக்கு பிறகு ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ள சினிமாவை காப்பாற்ற சில சலுகைகளை முதல்வரிடம் கேட்டிருக்கிறோம். பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும்போது நாங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்வது, தியேட்டர்களுக்கு மின் கட்டண சலுகை, வரி குறைப்பு, சினிமா கலைஞர்களை உற்சாகப்படுத்த நந்தி விருது வழங்குவது உள்ளிட் பல கோரிக்கைகள் வைத்திருக்கிறோம்.
தெலுங்கு திரைத்துறை வளர்ச்சிக்கு முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி விசாகப்பட்டினத்தில் 300 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அங்கு ஸ்டூடியோக்கள் கட்டப்படும். படப்பிடிப்புகள் நடத்தப்படும். என முதல்வர் உறுதி அளித்தார். என்றார்.