பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
உலகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரானோ அச்சத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன, சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தமிழ்த் திரையுலகமே முடங்கிப் போய்க் கிடக்கிறது.
பல பெரிய படங்களின் அப்டேட்டுகள் கூட ரசிகர்களுக்காக வழங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கெரானோவால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில் இதைப் பற்றி அவர்கள் எங்கே கவனிக்கப் போகிறார்கள் என்ற மனநிலைதான் அதற்குக் காரணம்.
இந்த சூழ்நிலையில் ஒரு பக்கம் கட்சித் தலைவராக அடிக்கடி அரசுக்கு அட்வைஸ் செய்யும் கமல்ஹாசன் மறுபக்கம் சினிமா நடிகராகவும் சில விஷயங்களை இந்த கொரானோ காலத்தில் நடத்துவது ஆச்சரியமாக உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு விஜய் சேதுபதியுடன் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், அடுத்து ஜுன் 11ம் தேதி ஏ.ஆர்.ரகுமானுடன் ஒரு நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த கொரானோ காலத்தில் கமல்ஹாசன் எந்த களப்பணியிலும் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது ஏற்கெனவே எழுந்துள்ளது. ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்ற விமர்சனமும் அவர் மீதுண்டு. இப்படியான கொரானோ சூழலில் சினிமா பற்றிய விவாதம் தேவைதானா என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அந்தப் பக்கம் அரசியல்வாதியாக கொரானோவுக்கு ஒரு அட்வைஸ். இந்தப் பக்கம் நடிகராக ஒரு விவாதம் ஏன் என்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்புதான் நாமே தீர்வு என்று சென்னையை மீட்டெடுக்கும் முயற்சி என ஒன்றை அறிவித்தார். அதுவும் சமூக வலைத்தள அறிவிப்பாகவே வந்தது.
ஏற்கனவே அமெரிக்காவில் கமல்ஹாசன் நடித்து வந்த சபாஷ் நாயுடு படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. தற்போது நடித்து இந்தியன் 2 படம் தொடர்ந்து சர்ச்சை இல்லாமல் நிம்மதியாக நடந்து முடியுமா என திரையுலகினர் எழுப்புகிறார்கள். இந்தசூழலில் எப்போதோ ஆரம்பிக்க போகும் தலைவன் இருக்கின்றான் படத்திற்கான புரொமோஷனை இப்போதே ஆரம்பித்துவிட்டார்.
அரசியல், சினிமா என இரண்டிலும் இப்படி மாறி மாறி பயணிப்பது அவரது எதிர்கால அரசியலைக் கேள்விக்குறியாக்கும் என்றே கருத்துகள் வெளிவருகின்றன. டிவியில் பிக் பாஸ் ஆரம்பித்தால் அதற்கு வேறு போக வேண்டும். ஒரே நேரத்தில் அரசியல், சினிமா, டிவி என மூன்று குதிரைகளை ஓட்ட ஆசைப்படுகிறார்.