விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள படம் 'பெண்குயின்'. உளவியல் திரில்லர் படமான இது வரும் 19ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது.
இதையொட்டி பென்குயின் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. சமந்தா, டாப்ஸி, த்ரிஷா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்து வெளியிட்ட இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கீர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பென்குயின் டீசரை பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு தாயின் பயங்கரமான கனவு நிஜமாகிறது", என குறிப்பிட்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள், படத்தின் கதையை இப்படி வெளியே சொல்லிவிட்டீர்களே கீர்த்தி என கிண்டல் செய்து வருகின்றனர்.