அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா |
ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பெண்குயின் படத்தின் டீசர் சற்று முன் வெளியானது.
இந்தப் படம் பொன்மகள் வந்தாள் படத்தை அடுத்து அமேசான் தளத்தில் வரும் ஜுன் 19ம் தேதி நேரடியாக வெளியாக உள்ளது. படத்தின் டீசரை த்ரிஷா, சமந்தா, மஞ்சுவாரியர், டாப்சி ஆகியோர் இன்று டுவிட்டரில் வெளியிட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வெளியிடுவதற்கு முன்பாகவே டீசரை படக்குழுவினர் வெளியிட்டுவிட்டார்கள்.
பொன்மகள் வந்தாள் படத்தில் அம்மா மீது விழுந்த அவப்பெயரை நீக்க மகள் போராடியது கதையாக அமைந்தது. இந்தப் படத்தில் காணாமல் போன தன் குழந்தையைத் தேடி அம்மா போராடுவது கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.
மொத்தமாக நான்கு அல்லது ஐந்து காட்சிகளில் படத்தின் கதையைப் புரிந்து கொள்ளும்படி ஒரு நிமிடம் 32 வினாடிகள் உள்ள டீசரை உருவாக்கி இருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. உடல் இளைத்துப் போய் மிகவும் ஒல்லியாக இருக்கிறார். ஹிந்திப் படத்தில் நடிப்பதற்காக அவர் உடலை இளைத்த போது இந்தப் படத்தை எடுத்து முடித்திருப்பார்கள் போலிருக்கிறது. எப்போதும் சிரித்த முகத்துடன் பார்த்த கீர்த்தி சுரேஷை டீசரில் சோகமே உருவாகப் பார்ப்பது சங்கடமாக இருக்கிறது.
டீசரின் முடிவில் நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் தோற்றத்தில் ஒருவர் கொலை (?) செய்வதைப் போன்று காட்டியிருப்பது தேவையா இயக்குனரே ?.
பொன்மகள் வந்தாள் படத்தை அடுத்து மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தை காட்டப் போகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. இதாவது சுவாரசியமாக இருக்கட்டும்.
Here we go! A mother's worst nightmare comes true. #PenguinOnPrime premieres June 19. @PrimeVideoIN⁰⁰ @EashvarKarthic @karthiksubbaraj @Music_Santhosh @KharthikD @Anilkrish88 @SaktheeArtDir @StonebenchFilms @PassionStudios_ @kaarthekeyens @sudhans2017 @SonyMusicSouth pic.twitter.com/FAWo8peRc1
— Keerthy Suresh (@KeerthyOfficial) June 8, 2020