Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு திருமணம்: டி.ராஜேந்தர் - உஷா கூட்டறிக்கை

07 ஜூன், 2020 - 16:21 IST
எழுத்தின் அளவு:
T.Rajendar,-Usha-about-Simbu-marriage

நடிகர் சிம்புவின் திருமணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அது எப்போதும் உண்மையாக இருந்ததில்லை.

தற்போதும் சிம்பு திருமணம் பற்றி ஒரு செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. லண்டனை சேர்ந்த தொழிலதிபர் மகளை சிம்பு திருமணம் செய்ய இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. தூரத்து உறவினரான அப்பெண்ணை சிம்புவின் பெற்றோர் தேர்வு செய்ததாகவும், கொரோனா முடிவு பெற்றப்பின் திருமணம் நடைபெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் வழக்கம் போல் இதுவும் வதந்தி தான் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சிம்புவின் தந்தை இயக்குனர் டி.ராஜேந்தர், தாய் உஷா ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய
என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யாஎன் மனைவி கர்ப்பமானால் நானே ... அசிங்கமாக பேசிய நெட்டிசன்: சரியாக பதிலடி கொடுத்த ஷெரின் அசிங்கமாக பேசிய நெட்டிசன்: சரியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (23)

meenakshisundaram - bangalore,இந்தியா
12 ஜூன், 2020 - 06:40 Report Abuse
meenakshisundaram pavam simbu onnum set aakalai .
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09 ஜூன், 2020 - 02:17 Report Abuse
Ramesh R இதுக்கு ஒரு கூட்டறிக்கை
Rate this:
Kazhaga Kanmani - Chandler,யூ.எஸ்.ஏ
08 ஜூன், 2020 - 20:39 Report Abuse
Kazhaga Kanmani avara avareythaan kattikkanum... adhukkum avar lateaathaan varuvaaru...
Rate this:
Vadivelu -  ( Posted via: Dinamalar Android App )
08 ஜூன், 2020 - 17:07 Report Abuse
Vadivelu பத்து வருஷம் முன்னால குத்த வைச்சவன் ... இன்னும் குனிந்து கோலம் போட்டுட்டு இருக்கான் ....
Rate this:
thulakol - coimbatore,இந்தியா
08 ஜூன், 2020 - 14:41 Report Abuse
thulakol kootu arikai veliyae vittarkal natirku evaluvu mukkiyam.
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in