Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை

07 ஜூன், 2020 - 15:36 IST
எழுத்தின் அளவு:
Director-Lingusamy-angry-statment-who-killed-elephant

கேரள யானை ஒன்று அன்னாசி பழத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை தெரியாமல் உண்டதில் வாய் வெடித்து சிதறியது. இதனால் கடந்த சில நாட்களாகவே வலியால் துடிதுடித்து சமீபத்தில் இறந்தது. அந்த யானை இறக்கும்போது கர்ப்பமாக இருந்தது என்பதுதான் இதில் மனதை உலுக்கும் இன்னொரு விஷயம்.. இந்த நிகழ்வு மனிதாபிமானம் கொண்ட பலரையும் கோபத்தின் எல்லைக்கே அழைத்து சென்றது. பலரும் இந்த செயலை செய்த அந்த கொடூரனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மீடியாக்களில் கொந்தளித்து வந்தனர்.

இந்தநிலையில் நடிகர் லிங்குசாமி இந்த விவகாரத்தில் யானை இறப்பதற்கு காரணமாக அமைந்த நபருக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என முடிவு செய்து, மானசீகமாக அதாவது தனது மனதிற்குள்ளேயே அந்த தண்டனையை நிறைவேற்றியும் விட்டார். அது என்ன தண்டனை என்பது குறித்து அவர் ஒரு ட்விட்டர் பதிவையும் வெளியிட்டுள்ளார்.

அதில் “கடைசியில் அவனை கண்டறிந்த பிறகு என்ன தண்டனை கொடுக்கலாம் என்ற பல யோசனைகளுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன்.. ஒரு தந்தம் கொண்டு நடு முதுகில் யானை பலம் கொண்டு இறக்கினேன்.. இன்னொரு தந்தம் கொண்டு கீழ்வழியாக மேல்நோக்கி ஏற்றினேன்.. அப்போதும் தீர்ந்தபாடிலை கோபம்.. ஏனெனில் அவன் கர்ப்பம் தரித்திருக்கவில்லை” என தனது ஆதங்கத்தை கோபமாக வெளிப்படுத்தியுள்ளார் லிங்குசாமி.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய ... என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா என் மனைவி கர்ப்பமானால் நானே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

konanki - Chennai,இந்தியா
12 ஜூன், 2020 - 01:22 Report Abuse
konanki தமிழ் நாட்டில் கொரோனா பரவ ஆதார காரணமாக இருந்த மனிதர்கள் போன்றவர்கள் தான் யானைய வெடி வச்சு செய்ஞ்சுட்டாங்க.என்ன செய்வது மிருகங்கள் கூட செய்யாத வஞ்சக கொலையை செய்த மிருகத்திற்கு ஏத்த கற்பனை தண்டனை.
Rate this:
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
11 ஜூன், 2020 - 22:13 Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி ஒரு சிறுபான்மையினரை இப்படி துன்புறுத்த நினைப்பது
Rate this:
Santhosh Kumar - Chennai,இந்தியா
11 ஜூன், 2020 - 16:08 Report Abuse
Santhosh Kumar ithu poothaathu nanbaa ...
Rate this:
முகமூடி - ராஜகீழ்பாக்கம், செங்கை மாவட்டம்,இந்தியா
11 ஜூன், 2020 - 07:55 Report Abuse
முகமூடி கொடும்பாதகம் செய்பவர்களை கழுவிலேற்றுவது நமது தமிழர் மரபு .அதைத்தான் இவர் கொஞ்சம் வெறித்தனமாக கூறி உள்ளார் .இன்று கழுவேற்றம் இல்லாததால் கொடும்பாதகம் புரிவோரை (நிர்பயா ) தூக்கிலேற்றி கொள்வதற்கு கூட நமது சட்ட அமைப்பு அனுமதிக்க வில்லை . விளைவு ? நீ பண பலமும் அரசியல் பலமும் கொண்டவனாக இருப்பின் நீ செய்யும் கொடும் பாதக செயலுக்கு சட்டமே உனக்கு பாதுகாப்பு கொடுக்கும் என்ற இழி நிலையில் இன்று வாழ்கிறோமே ? இது மட்டும் ஏற்புடையதா ?
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10 ஜூன், 2020 - 11:41 Report Abuse
Malick Raja இது போன்ற கருத்துக்கள் மிருகங்களுக்கு மட்டுமே ஏற்புடையதாக இருக்கும் .. கொரோனாவை விட கொடிய நோய் உடையவர்கள் மட்டுமே இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பார்கள்
Rate this:
Santhosh Kumar - Chennai,இந்தியா
11 ஜூன், 2020 - 16:10Report Abuse
Santhosh Kumaroru vayilla karbaththudan ulla jeevanai kolbavanukku itharkku meleyum thandanai kodukkalaam. oruvan mirugaththinai vida kevalmaana janthuvaagum poluthu, naam mirugamaavathu paravaayillai....
Rate this:
Santhosh Kumar - Chennai,இந்தியா
11 ஜூன், 2020 - 16:13Report Abuse
Santhosh Kumarithil thamizinam engu vanthathu?...
Rate this:
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
23 ஜூன், 2020 - 12:36Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி மாலிக் சொல்வது மிகவும் சரி...
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in