Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்

07 ஜூன், 2020 - 15:06 IST
எழுத்தின் அளவு:
Rajisha-Vijayans-angry

இந்த ஊரடங்கு காலத்தில் அரசாங்கத்தால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. பேருந்துகளில் இடம்பிடிக்க முண்டியடிக்கும் கூட்டத்தை பல புகைப்படங்களில் பார்த்திருப்போம்.. ஆனால் விமானம் தரையிறங்கியதும் அதிலிருந்து இறங்குவதற்கு கூட பொறுமையின்றி, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட கூட்டத்தை பார்த்து மலையாள நடிகை ரஜிஷா விஜயன் எரிச்சல் அடைந்து, இதுகுறித்து சோஷியல் மீடியாவில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடித்துவரும் கர்ணன் படத்தின் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ள ரஜிஷா விஜயன், விமான பயணிகளின் இந்த செயலை பார்த்து, “விமானத்தில் நடு இருக்கையை காலியாக வைத்து, விமான ஊழியர்கள் அனைவரும் எச்சரிக்கையாக செயல்பட்டும் கூட, பயணிகள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டால் எப்படி..? விமானத்தில் இருந்து இறங்கி செல்வதற்கு அப்படி என்ன அவசரம் என்றுதான் எனக்கு புரியவில்லை. பயணிகளே, சமூக இடைவெளி என்பது நமக்கு மட்டுமல்ல நம்மை சுற்றியுள்ள ஒவ்வொருக்கும் சேர்த்தே நாம் கடைபிடிக்கவேண்டும்” என அதில் கூறியுள்ளார்.

இதே ரஜிஷா விஜயன் தான் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு முதல்தர மரண தண்டனை தரவேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; ... கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை கேரளாவில் யானையை கொன்றவருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

krish - chennai,இந்தியா
09 ஜூன், 2020 - 12:35 Report Abuse
krish இது இன்றைய நாட்டின் நிலவரம். அவலம். வெட்கக்கேடு. யாருக்கும் பொறுமை இல்லை. எதிலும், ஆத்திரம்,அவசரம், அவசரம் தான். நிதானம் துளியும் இல்லை.ஆக்க பொறுத்தவனுக்கு, சோறு ஆற பொறுக்க முடிவதில்லை. இதுதான் நிதர்சனம்.
Rate this:
Ram - ottawa,கனடா
09 ஜூன், 2020 - 06:55 Report Abuse
Ram Madam, why elephant was ed, or dog's mouth taped? Because politicians allow building of resort by rich people in the forest area, wild animals visits the village and damage the corps of poor farmer, without solving this issue, government is hunting for animal ers. Why dog mouth is tapped? There are too many stray dogs, some times kids are bidden badly by these dogs, therefore aggravated public eliminate them, why government cannot remove those stray dogs from the streets? I pity for the animals for the govt inaction/inability
Rate this:
rajaai - chennai,இந்தியா
08 ஜூன், 2020 - 20:41 Report Abuse
rajaai ஐ லைக் திஸ் கேர்ள். குட். வெளியே கேட்டா அப்பாவி மக்கள்ன்னு சொல்லிக்குவான், பனரதெல்லாம் படு பாவி வேலை.
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
08 ஜூன், 2020 - 17:42 Report Abuse
S. Narayanan தமிழுக்கு புது நடிகை தானே. அதனால் விளம்பரத்திற்காக இப்படி ஒரு கருது சொல்லி இருக்கிறார் மக்களே. அவ்வளவு தான். உங்க வேலைய பாருங்க.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
08 ஜூன், 2020 - 16:07 Report Abuse
Endrum Indian ஆக மொத்தம் ஒன்று நன்றாகத் தெரிகின்றது சினிமா தொழிலாளிகள் தான் நமது ரோல் மாடேல்கள் அவர்கள் சொல்வதைத்தான் டாஸ்மாக் நாட்டு மக்கள் கேட்கின்றார்கள் எனபதை போல் இந்த மாய தோற்றம் என்று அடங்குமோ???
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in