Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு

07 ஜூன், 2020 - 14:59 IST
எழுத்தின் அளவு:
71-peoples-struck-in-South-Africa-in-last-3-months

நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் நடித்து வரும் 'ஆடுஜீவிதம்' படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மார்ச் மாதம் ஜோர்டன் நாட்டுக்கு சென்றனர்.. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக திடீரென ஊரடங்கு அமலுக்கு வந்ததால் அவர்கள் அங்கேயே தங்க வேண்டி நேர்ந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதம் கழிந்த பின்னரே சமீபத்தில் பிரித்விராஜ் உள்ளிட்ட ஆடுஜீவிதம் படக்குழுவினர் 52 பேரும் ஊர் திரும்பினார்கள்.

இவர்களுக்கு சற்றும் குறையாத விதமாக, 'டிஜிபோட்டி' என்கிற மலையாள திரைப்பட குழுவினர் 71 பேரும் தென்னாப்பிரிக்காவில் இதேபோல ஊரடங்கில் மாட்டிக்கொண்டு, நேற்று தான் கேரளா திரும்பியுள்ளனர். இந்தப்படக்குழுவில் பிரபல இயக்குநர் திலீஷ் போத்தன், காமெடி நடிகர் ஜேக்கப் கிரிகேரி ஆகியோரும் இருந்தனர். ஏப்-18லேயே இவர்களது படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த படக்குழுவினர் தற்போது கேரளா திரும்பியுள்ள நிலையில் தான், இவர்கள் தென் ஆப்ப்ரிக்காவில் சிக்கிக்கொண்ட விஷயமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. படக்குழுவினர் ஒருவர் கூட தாங்கள் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் தகவலை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொள்ளவில்லை. இவர்கள் பற்றிய செய்தி எதுவும் இத்தனை நாட்களாக ஊடகங்களிலும் வெளியாகவில்லை என்பது தான் ஆச்சர்யம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய உன்னி முகுந்தன்சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய ... அனுபமா விலகவில்லை ; இயக்குனர் மறுப்பு அனுபமா விலகவில்லை ; இயக்குனர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

amalan - thanjavur,டிஜிபௌசி
08 ஜூன், 2020 - 21:25 Report Abuse
amalan They were in Djibouti, East Africa. Not in South Africa. They left Djibouti on 5th June, 2020.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in