விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியது திரையுலகையும் ரசிகர்களையும் அதிர வைத்தது. அதையடுத்து சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்தன.. அதேசமயம் சின்மயிக்கு நிறைய மிரட்டல்களும் வந்தனவாம்.. அவருக்கு விருப்பமே இல்லாதபோதும் கூட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி மிரட்டப்பட்டாராம். இந்த மிரட்டல் குறித்து ஒரு இயக்குனர் நண்பருடன் பகிர்ந்துகொண்டேன் என பேட்டி அளித்ததாக ஒரு ஆங்கில வலைத்தளம் ஒன்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை பார்த்துவிட்டு, தமிழ்படம், தமிழ்படம்-2 ஆகியவற்றை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். “ஆம்.. சின்மயிக்கு விருப்பம் இல்லாமலேயே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மிரட்டப்பட்டார்.. அதை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அவரது பயம் உண்மையானது.. இந்த நபர் (வைரமுத்து) நம் திரையுலகில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
சின்மயி-வைரமுத்து சர்ச்சை அடங்கி வெகுநாட்கள் ஆகியிருந்த நிலையில் தற்போது இணையதளத்தில் அதுகுறித்த கட்டுரை வெளியாகி இருப்பதும் அதை பார்த்துவிட்டு சின்மயிக்கு ஆதரவாக இயக்குனர் சி.எஸ்.அமுதன் குரல் கொடுத்திருப்பதும் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.