ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
தமிழில் வெளிவந்த ஆடுகளம் படத்தில் த்ரிஷாவுக்கு பதில் நடிக்க வந்தவர் தான் டாப்ஸி. படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகளில் வெள்ளாவி பொண்ணு என்று இவரை குறிப்பிட தமிழக ரசிகர்களால் வெள்ளாவி பொண்ணாகவே கொண்டாடப்பட்டார்.
தமிழில் நடித்த படங்கள் குறைவென்றாலும் பாலிவுட்டில் முன்னணி நடிகை ஆகிவிட்டார். சமீபத்தில் அவர் நடித்த தப்பட் படம் அவரை இன்னும் உயரத்தில் உட்கார வைத்தது. கடந்த ஒரு ஆண்டில் டாப்ஸி நடித்து வெளிவந்த படங்கள் 352 கோடியை வசூலித்துள்ளது என்ற புள்ளி விபரத்தை ஒரு தனியார் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி அவர் நடித்த பாடியா 88 கோடியும், கேம் ஓவர் 4 கோடியே 69 லட்சமும், மிஷன் மங்கள் 202 கோடியே 98 லட்சமும், சாண்ட் கி அனக் 23 கோடியே 40 லட்சமும், தப்பாட் 33 கோடியே 6 லட்சமும் என மொத்தம் 352 கோடி வசூலித்துள்ளது.
இதன் மூலம் டாப்ஸி பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, ஆலியாபட் வரிசையில் இல்லாவிட்டாலும் அடுத்த வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். இந்திப் படத்தில் நடிக்க டாப்ஸி வாங்கும் சம்பளம் 3 கோடி.