Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு

07 ஜூன், 2020 - 13:56 IST
எழுத்தின் அளவு:
Television-shooting-from-June-10

கொரோனா ஊரடங்கிற்கு முன்பே அதாவது மார்ச் 19ந் தேதி முதலே சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தற்போது 2 மாதங்களை தாண்டியும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. சேனல்கள் பழைய சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்கின்றன.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் 20 பேருடன் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்தது. ஆனால் 60 பேருடன் நடத்த சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்தது. அதற்கு தமிழக அரசு ஒத்துக் கொண்டது. சீரியல்களில் நடித்த பல முன்னணி நடிகைகள் ஐதராபாத், பெங்களூரு, கொச்சி பகுதிகளில் இருப்பதால் அவர்கள் வருவதற்காக காலஅவகாசம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்குவது பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சுஜாதா, செயலாளர் குஷ்பு, முன்னாள் தலைவர் ராதிகா சரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்திற்கு பிறகு குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது: சின்னத்திரை படப்பிடிப்புகளை வருகிற 10ந் தேதி முதல் தொடங்க முடிவு செய்து இருக்கிறோம். படப்பிடிப்பில் 60 பேர்கள் கலந்து கொள்ளலாம் என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. தொழில்நுட்ப கலைஞர்களை சேர்க்காமல், 40 பேர்களுடன் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளோம்.

அவ்வப்போது கிருமிநாசினி தெளிப்பது, ஒரே இடத்தில் படப்பிடிப்பை நடத்தாமல் அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களை மாற்றுவது போன்ற விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும். முன்பு படக்குழுவினர் அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்பட்டு வந்தது. அதில் சில சிக்கல்கள் இருப்பதால், நடிகர்-நடிகைகள் உள்பட படக்குழுவினர் அனைவரும் அவரவர் வீடுகளில் இருந்தே சாப்பாடு கொண்டு வர வேண்டும், என்று முடிவு செய்து இருக்கிறோம் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள்ஓடிடி தளங்களை அணுகும் பல ... கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in