Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள்

07 ஜூன், 2020 - 13:38 IST
எழுத்தின் அளவு:
Many-producers-approaching-OTT

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு ஏறக்குயை மூன்று மாதங்கள் ஆகப் போகிறது. இந்த மூன்று மாதங்களிலும் தியேட்டர்கள் திறக்கப்பட்டிருந்தால் குறைந்தது 50 படங்களாவது வெளிவந்திருக்கும். இன்னும் எத்தனை மாதங்கள் தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருக்கும் என்பது தெரியவில்லை.

இதனிடையே, இந்த ஊரடங்கு சிக்கலைப் பயன்படுத்தி ஓடிடி தளங்கள் நேரடியாகவே படங்களை அவர்களது தளங்களில் வெளியிட முயற்சிகள் எடுத்து அதை ஆரம்பித்தும் விட்டார்கள். 'பொன்மகள் வந்தாள்' படத்தை அடுத்து 'பெண்குயின், அந்தகாரம்' ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளன. மேலும், சில படங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். அவை அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள் தான்.

அதே சமயம், சில முன்னணி நடிகர்களின் படங்களையும் அப்படி நேரடியாக வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படங்களைத் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் வட்டிக்குக் கடன் வாங்கித்தான் படங்களைத் தயாரிக்க முதலீடு செய்கிறார்கள். எடுத்து முடிக்கப்பட்ட படங்கள் வெளியாகாமல் இருந்தால் நாளுக்கு நாள் அவர்களுக்கு வட்டி ஏறிக் கொண்டுதான் போகிறது.

அப்படியே தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கடந்த மூன்று மாதங்களாக வெளியாகாத படங்கள், தியேட்டர்கள் திறக்கப்படும் வரை முழு வேலையும் முடிந்த படங்கள் என பல படங்கள் போட்டிக்கு நிற்கும். எத்தனை தியேட்டர்கள் அரசு சொல்லும் பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்பட ஆரம்பிக்கும் என்பதும் தெரியாது.

கடந்த சில நாட்களாக ஒரு சொட்டு 'சானிடைசர்' தந்ததற்கே 100, 200 ரூபாய் கட்டணம் வாங்கும் கடைகள், மருத்துவமனைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் பரபரப்பு உள்ளது. தியேட்டர்களிலும் அதற்கான கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் மக்கள் வருவார்களா என்பதும் சந்தேகம்தான்.

எனவே, ஓடிடி தளங்களை நோக்கி தயாரிப்பாளர்கள் பலர் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்களாம். அவர்களது தயாரிப்பு செலவு போக கூடுதலாக ஓரிரு கோடி லாபம் வந்தால் கூட படங்களைக் கொடுத்துவிடும் மனநிலையில் இருக்கிறார்களாம்.

அதனால், இனி வரும் நாட்களில் மேலும் சில படங்களைப் பற்றிய 'நேரடி ஓடிடி ரிலீஸ்' தகவல்கள் அதிகம் வரலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
60 வயதுக்கு மேல் அனுமதியில்லை, அப்புறம் எப்படி ஷுட்டிங் நடக்கும் ?60 வயதுக்கு மேல் அனுமதியில்லை, ... 10ந்  தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு 10ந் தேதி முதல் சின்னத்திரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in