பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன், நாமே தீர்வு என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், தட்டுல தாளம் போட்டால் சோறு கிடைக்காது என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட அது உண்மையாகிவிட்டது. நான் தட்டுனது உங்களின் கவன ஈர்ப்புக்காகவே. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்கடக்க நடந்து பசியால் சாவதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். நாள், கிழமை மறந்து இயங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், வீழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம், சிதையும் வாழ்வாதாரம், அன்றாட காட்சிகள் பசியால் மரணம்... இவை எல்லாமும் நம் எல்லோரின் அலட்சியத்தால் தான். இதை எல்லாம் பார்க்கும் கோபம் வருகிறது.
கொள்ளை நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு மீது விமர்சனம் வைக்க இது நேரம் அல்ல. இது சில்லறை அரசியலுக்கான நேரம் அல்ல. நாளை என்ன, இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான, ஆக்கப்பூர்வ செயல்களுக்கான நேரம். இது நாமே தீர்வாகும் நேரம். சென்னையை கொரோனாவுக்கான தலைநகராக நாம் மாற்றி விடக்கூடாது. இதற்கான முயற்சி தான் நாமே தீர்வு எனும் இயக்கம். இது தனி மனித இயக்கம் அல்ல, நாம் அனைவரும் பங்கேற்கும் இயக்கம். இனி வரும் நாட்களுக்கு நாள் சாதி, மதம், மொழி, கட்சி பேதங்கள் கடந்து ஒரே கோட்டில் இணைவோம். இந்த முயற்சியின் முதல் தொண்டன் நான். இன்னும் நிறைய தொண்டர்கள் தேவை. வாருங்கள் நாமே தீர்வாவோம்.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
என்னைப்போல பலரின் கனவுகளை நனவாக்கிய சென்னையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி இது.
தீர்வுகளை தேடும் தன்னார்வலராக பதிவு செய்திட
63 - 69- 81- 11- 11 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். #நாமேதீர்வு #NaameTheervu pic.twitter.com/2s3zhwwBaS
— Kamal Haasan (@ikamalhaasan) June 5, 2020