'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
பிரபல இந்தி சின்னத்திரை நடிகை சிம்ரன் சச்தேவா. இவர் தற்போது சின்னத்திரை தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:
கலர்ஸ் இந்தி சேனலில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சோட்டி சர்தார்னி. மிகுந்த வரவேற்புடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் ஹர்லீன் கவுர் என்ற கேரக்டரில் மான்சி சர்மா என்பவர் நடித்து வந்தார். உடல்நலக் கோளாறு காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. பின்னர் அந்த கேரக்டரில் சிம்ரன் சச்தேவா நடித்தார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த தொடரின் தயாரிப்பாளர் பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்துள்ளார். அதனால் சிம்ரன் சச்தேவாவுக்கு 40 சதவித சம்பளத்தை குறைத்து தருவோம் என்று கூறியுள்ளார். இதை ஏற்றுக் கொள்ளாத சிம்ரன் தொடரில் இருந்து விலகினார்.
ஆனால் நான் விலகியற்கு சம்பளம் மட்டுமே காரணம் இல்லை என்று சிம்ரன் இப்போது கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 40 சதவிகித சம்பள குறைப்புக்கு என்னை கட்டாயப்படுத்தினர். இதற்கு முன்னும் சம்பளத்தை சரியான நேரத்துக்கு தரவில்லை. இது தொடர்பாக பல சிக்கல்களை எதிர்கொண்டேன்.
இது ஒரு புறம் இருந்தாலும் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். மரியாதை இல்லாமலும் முரட்டுத்தனமாகவும் நடந்தார். மறைமுகமான பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் இந்த தொடரில் இருந்து வெளியேறினேன். என்று கூறியுள்ளார். சிம்ரனின் இந்த புகார் இந்தி சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.